மிச்சிகன் ஏரி

From Wikipedia, the free encyclopedia

மிச்சிகன் ஏரிmap
Remove ads

மிச்சிகன் ஏரி (Lake Michigan) வட அமெரிக்காவிலுள்ள ஐந்து பேரேரிகளில் ஒன்று. இது மட்டுமே முழுமையாக ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப்பகுதிக்குள் அமைந்ததாகும். மற்ற நான்கு பேரேரிகளும் ஐக்கிய அமெரிக்கா, கனடா இருநாட்டுப் பகுதிகளிலும் உள்ளன. பேரேரிகளில் இது கொள்ளளவின்படி இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும்.[1] மேற்பரப்பளவின்படி மூன்றாவது பெரியதாகும்; சுப்பீரியர் ஏரியும் இயூரோன் ஏரியும் இதைவிடப் பெரியன. (இந்த ஏரி சிறிதளவே ஐக்கிய அமெரிக்க மாநிலம் மேற்கு வர்ஜீனியாவைச் சிறியது). கிழக்கில் இந்த ஏரியின் வடிநிலத்தில் இயூரோன் ஏரியும் பரந்த மக்கினாக் நீரிணை மூலம் இணைந்துள்ளது. ஒரே மேற்பரப்பு உயரத்தைக் கொண்டுள்ளதால் இவை இரண்டும் ஒரே ஏரி எனலாம்.[4]

விரைவான உண்மைகள் மிச்சிகன் ஏரி, அமைவிடம் ...

மிச்சிகன் ஏரியின் மேற்கிலிருந்து கிழக்காக விஸ்கொன்சின், இலினொய், இந்தியானா, மிச்சிகன் மாநிலங்கள் பகிர்ந்து கொள்கின்றன. இதன் கரையோரமாக அமைந்துள்ள துறைமுகங்களில் சிகாகோ; மில்வாக்கி; கிரீன் பே, விசுகான்சின்; கேரி, இந்தியானா; மற்றும் மஸ்கெகோன், மிச்சிகன் அடங்கும். "மிச்சிகன்" என்ற சொல் துவக்கத்தில் ஏரியைக் குறிப்பிடுவதாகவே இருந்தது; இது உள்ளூர் ஒஜிப்வெ மொழியில் பெரும் நீர் என்ற பொருள்தரும் மிச்சி காமி என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்கலாம்.[5]

Remove ads

புவியியல்

Thumb
மிச்சிகன் ஏரியின் ஆழ அளவியல் நிலப்படம்.[6][7][8] மிக ஆழமான இடம் "×" என குறியிடப்பட்டுள்ளது.[9]
Thumb
மிச்சிகன் ஏரி வடிநிலம்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைகளுக்குள்ளே முழுமையும் உள்ள ஒரே அமெரிக்கப் பேரேரி மிச்சிகன் ஏரியாகும்; மற்ற நான்கு ஏரிகளும் கனடாவுடன் பகிரப்பட்டுள்ளன.[10] இது அமெரிக்க நடுமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

புள்ளியியலும் அளவியலும்

மிச்சிகன் ஏரியின் மேற்புரப் பரப்பு 22,404 ச.மை (58,026 கி.மீ.2); (13,237 சதுர மைல்கள், 34,284 கி.மீ.2 மிச்சிகன் மாநிலத்திலும்,[2] 7,358 சதுர மைல்கள், 19,056 கி.மீ.2 விசுகான்சின் மாநிலத்திலும், 234 சதுர மைல்கள், 606 கி.மீ.2 இந்தியானா மாநிலத்திலும், 1,576 சதுர மைல்கள், 4,079 கி.மீ.2 இல்லிநாய் மாநிலத்திலுமாக அமைந்துள்ளது) எனவே மேற்புர பரப்பின் அளவைக்கொண்டு ஒரு நாட்டின் எல்லைக்குள் முழுவதுமாக அமைந்துள்ள ஏரிகளில் மிகப் பெரும் ஏரியாக விளங்குகிறது. ( உருசியாவிலுள்ள பைக்கால் ஏரி, நீர்க் கொள்ளளவைக்கொண்டு இதைவிடப் பெரியதாகும்). உலகளவில் மிச்சிகன் ஏரி ஐந்தாவது மிகப்பெரிய ஏரியாகும். உலகில் மேற்புர பரப்பைக் கொண்டு மிகப்பெரிய நன்னீர் ஏரியான மிச்சிகன்-இயூரோன் ஏரி அமைப்பின் பெரிய பாதியாகவும் உள்ளது. இது 307 மைல்கள் (494 km) நீளமும் 118 மைல்கள் (190 km) அகலமும் 1,640 மைல்கள் (2,640 km) நீளமான ஏரிக்கரையும் கொண்டிருக்கிறது. ஏரியின் சராசரி ஆழம் 46 பதொம்கள் 3 அடி (279 அடி; 85 மீ), இங்குள்ள மிக ஆழமான பகுதி 153 பதொம்களும் 5 அடியுமாக (923 அடி; 281 மீ) உள்ளது.[2][11] மிச்சிகன் ஏரியில் 1,180 கன மைல்கள் (4,918 கி.மீ.³) கொள்ளளவிற்கு நீர் உள்ளது. வடமேற்கிலுள்ள கிரீன் பே (பசுமை விரிகுடா) மிகப்பெரிய விரிகுடாவாகும். வடகிழக்கிலுள்ள கிராண்டு டிராவர்சு விரிகுடா மற்றொரு பெரிய விரிகுடா ஆகும். வட பாதியிலுள்ள சிப்பெவா வடிநிலம் இதன் மிக ஆழமான பகுதியாகும்; இது தென் சிப்பெவா வடிநிலத்திலிருந்து ஒப்பீட்டளவில் ஆழம் குறைந்த நடுஏரி பீடபூமியால் (Mid Lake Plateau) பிரிக்கப்பட்டுள்ளது.[12][13]

நகரங்கள்

Thumb
மில்வாக்கி ஏரிக்கரை

மிச்சிகன் ஏரியின் கரையோரமாக 12 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் சிகாகோ, மில்வாக்கி பெருநகரப் பகுதிகளில் வாழ்பவர்களாவர். வடக்கு மிச்சிகனிலும் விசுகான்சினின் டோர் மாவட்டத்திலும் பல சமூகங்கள் சுற்றுலாவை நம்பியே வாழ்கின்றனர். மிச்சிகன் ஏரியின் அழகும் மனமகிழ்வு வாய்ப்புகளும் பருவம்சார்ந்த பெரும் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.[14] பருவம்சார் வாசிகள் பெரும்பாலும் ஏரிக்கரையில் கோடை இல்லங்களில் வசித்துவிட்டு குளிர்காலத்தில் தங்கள் சொந்த ஊரிலுள்ள இல்லம் திரும்புகின்றனர். ஏரியின் தென்முனையில் இந்தியானாவின் கேரி அருகே பெருமளவில் தொழில்கள் வளர்ந்துள்ளன. மிச்சிகன் ஏரியின் கரையில் உள்ள நகரங்களாவன:

இல்லினாய்

  • சிகாகோ
  • இவான்சுடன்
  • கிளென்கோ
  • ஐலாந்து பார்க்
  • கெனில்வர்த்
  • பாரஸ்ட் ஏரி
  • பிளஃப் ஏரி
  • வட சிக்காகோ
  • வாக்கெகன்
  • வில்மெட்
  • வின்னெட்கா
  • சியான்

இந்தியானா

  • கிழக்கு சிக்காகோ
  • கேரி
  • அம்மாந்து
  • மிச்சிகன் நகரம்
  • போர்ட்டேஜ்
  • போர்ட்டர்
  • வைட்டிங்

மிச்சிகன்

  • பென்டன் துறைமுகம்
  • பிரிட்ஜ்மேன்
  • சார்லெவ்வா
  • டக்ளசு
  • எல்பர்ட்டா
  • எசுகானபா
  • பெரிசுபர்கு
  • பிராங்க்போர்ட்
  • கிளாட்சுடோன்
  • கிளென்
  • கிராண்டு பீச்
  • கிராண்டு அவன்
  • ஆர்பர் இசுபிரிங்சு
  • ஒல்லாந்து
  • லுடிங்டன்
  • மக்கினா நகரம்
  • மனிஸ்தீ
  • மணிஸ்திக்கு
  • மெனோமினீ
  • மிச்சியானா
  • முஸ்கெகான்
  • நியூ பஃபலோ
  • நார்ட்டன் ஷோர்சு
  • பென்ட்வாடர்
  • பெடோசுக்கி
  • சௌகத்துக்
  • புனித யோசப்பு
  • ஷோரம்
  • தெற்கு அவன்
  • டிராவர்சு நகரம்

விசுகான்சின்

  • அல்கோமா
  • குடாகி
  • பாக்சு பாயின்ட்
  • கிரீன் பே
  • கெனோஷா
  • கெவானீ
  • மனிதோவோக்
  • மில்வாக்கி
  • மெக்குவான்
  • ஒகொன்டோ
  • வாசிங்டன் துறைமுகம்
  • ராசினெ
  • செபோய்கன்
  • ஷோர்வுட்
  • தென் மில்வாக்கி
  • இசுடர்ஜியான் பே
  • டூ ரிவர்சு
  • வைட்பிஷ் பே
Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads