மிரி மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிரி மாவட்டம் (மலாய் மொழி: Daerah Miri; ஆங்கிலம்: Miri District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; மிரி பிரிவில்; ஒரு மாவட்டமாகும். போர்னியோ தீவில் புரூணையின் எல்லைக்கு அருகில் உள்ளது.

மிரி மாவட்டத்தை மிரி மாநகரம் (Miri City) (997.43 கி.மீ.2); சிபுட்டி துணை மாவட்டம் (Sibuti sub-district) (842.47 கி.மீ.2); மற்றும் நியா துணை மாவட்டம் (Niah sub-district) (2887.21 கி.மீ.2) எனப் பிரித்துள்ளார்கள்.
அவை மிரி மாநகரத்தில் அமைந்துள்ள மிரி மாவட்ட அலுவலகம்; சிபுட்டி துணை மாவட்ட அலுவலகம்; மற்றும் நியா துணை மாவட்ட அலுவலகம் ஆகியவற்றால் நிர்வகிக்கப் படுகின்றன.[2] மிரி மாநகரம் மிரி மாநகர மன்றத்தால் (Miri City Council) (MCC) நிர்வகிக்கப் படுகிறது.
Remove ads
வரலாறு
1910-ஆம் ஆண்டில், ராயல் டச்சு செல் (Royal Dutch Shell) எனும் நிறுவனத்தின் மூலமாக முதல் எண்ணெய்க் கிணறு மிரியில் தோண்டப்பட்டது. அதன் பின்னர்தான் மிரி எனும் நகரமே வெளிச்சத்திற்கு வந்தது.
மிரியில் எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டது, மிரி மாவட்டத்தின் விரைவான வளர்ச்சிக்கு பெரிய அளவில் வழிவகுத்தது. இதன் விளைவாக மிரி நகரம், 1929-ஆம் ஆண்டில் சரவாக் மாநிலத்தின் வடக்குப் பகுதியின் நிர்வாக மையமாகவும் மாறியது.
இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போரின் போது, தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானிய படையெடுப்பின் போது, ஜப்பானியர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த மிரி எண்ணெய் வயல்களை ஜேம்சு புரூக் அரசாங்கம் அழித்தது.
ஆனால் போர்னியோவில் ஜப்பானியத் துருப்புக்கள் முதலில் தரையிறங்கிய இடமே மிரி நகரம் தான். எண்ணெய் வயல்களை எரித்ததால் எந்த நன்மையும் ஏற்படவில்லை.
ஆழ்க்கடலில் எண்ணெய்க் கிணறுகள்
எஞ்சி இருந்த எண்ணெய் வயல்களை ஜப்பானியர்கள் பயன்படுத்தி வந்தனர். இருப்பினும் மிரியில் இருந்த எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள், நேச நாடுகளின் அடுத்தடுத்த வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காக மாறின.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் பெட்ரோலியத் தொழில் மிக முக்கியப் பங்கு வகித்தது. 1950-களில் இருந்து எண்ணெய்க் கிணறுகள் ஆழ்க்கடலில் தோண்டப்பட்டன.
பெட்ரோனாஸ்
1989 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் மிரியின் உள்நாட்டுப் பகுதிகளில் புதிய எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
1974-ஆம் ஆண்டில், மலேசியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸ் உருவானது. மிரி வட்டாரத்தில் எண்ணெய் ஆய்வுகளில் பெட்ரோனாஸ் மற்றும் ஷெல் நிறுவனங்கள் இணைந்து செயல்படத் தொடங்கின.
Remove ads
மக்கள்தொகை
1991 முதல் 2000 வரை மிரி மாவட்ட மக்கள்தொகை வளர்ச்சி 3.5%-ஆக உள்ளது. இதற்கிடையில், 2000 முதல் 2010 வரை, 2.88% மக்கள்தொகை வளர்ச்சி கண்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads