மு. ச. காரியப்பர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கேட் முதலியார் முகமது சம்சுதீன் காரியப்பர் (Mohammed Samsudeen Kariapper, ஏப்ரல் 29, 1899 - ஏப்ரல் 17, 1989) இலங்கை முஸ்லிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

விரைவான உண்மைகள் எம். எஸ். காரியப்பர்M. S. Kariapperநாஉ, இலங்கை நாடாளுமன்றம் கல்முனை ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை

1899 ஆம் ஆண்டில் பிறந்த காரியப்பர் கல்முனை, உவெசுலி கல்லூரியில் கல்வி கற்றவர். இவர் ஒரு செல்வாக்கு மிக்க விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தேங்காய் வணிகரும் ஆவார்.

அரசியலில்

காரியப்பர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கல்முனையில் 1947 தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[1] 1952 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2]

அதன் பின்னர் கல்முனை நகரசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவர் பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் சார்பில் 1956 தேர்தலில் கல்முனையில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[4] நாடாளுமன்றம் சென்ற ஆறு மாதத்தில் அவர் தமிழரசுக் கட்சியை விட்டு விலகி அன்றைய சாலமன் பண்டாரநாயக்காவின் அரசில் இணைந்தார். மார்ச் 1960 தேர்தலில் இலங்கை சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்..[5]

1960 ஆம் ஆண்டில் காரியப்பர் அகில இலங்கை இசுலாமிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியைத் தோற்றுவித்தார். சூலை 1960 தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்..[6] 1960 இன் இறுதியில் தலகோடப்பிட்டிய ஊழல் ஆணையத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளியாகக் காணப்பட்டார்.

காரியப்பர் மீண்டும் 1965 தேர்தலில் கல்முனைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[7] ஆனாலும், நாடாளுமன்றம் சென்ற சில மாதங்களிலேயே 1960 ஆம் ஆண்டு இவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கையை இழந்தார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads