முகம்மது ஷா

From Wikipedia, the free encyclopedia

முகம்மது ஷா
Remove ads

முகம்மது ஷா (Muhammad Shah= Roshan Akhtar) (محمد شاه) (1748 1702) , என்ற முகலாயப் பேரரசர் இந்தியாவை 1719 ஆண்டு முதல் 1748 வரை ஆண்டார்.[1][2][3] முதலாம் பகதூர் ஷாவின் நான்காவது மகனான சாகன் ஷாவின் மகன் ஆவார். தனது 17வது வயதில் சையத் சகோதரர்களின் உதவியால் அரியணை ஏறினார். பின்னர், அவர்களை அயிதராபாத் நிசாம் மேலாண்மையர் (கொமர்-உத்-தின் கான்) உதவியுடன் விரட்டினார். மகிழ்ச்சி உருவாக்குபவர் என்ற பொருளுடைய ரங்கீலா என்ற அடைமொழியை வரலாற்று ஆய்வாளர்கள் இவருக்கு அளித்துள்ளனர்.[4]

விரைவான உண்மைகள் முகம்மது ஷா, ஆட்சிக்காலம் ...
Remove ads

நாதிர் ஷாவின் படையெடுப்பு

1739ல் பாரசீகத்தின் அப்சரித்து வம்ச பேரரசர் நாதிர் ஷா, முகலாயப் பேரரசின் வடமேற்கு பகுதிகளைக் கைப்பற்றி, பின்னர் அரியானாவின் கர்ணல் பகுதியில் முகலாயப் படைகளுடன் போரிட்டார். போரில் தோல்வியடைந்த முகலாயப் பேரரசர் முகமது ஷா, நாதிர் ஷாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் படி, கோஹினூர் வைரமும், விலை மதிப்பு மிக்க மயிலாசனமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் நாதிர் ஷாவுக்கு கொடுக்கப்பட்டதுடன், தனது மகளை நாதிர் ஷாவின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.[5]

Remove ads

காட்சியகம்

மேற்கோள்கள்

இதையும் காணவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads