முகேஷ் குமார் (துடுப்பாட்டக்காரர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முகேஷ் குமார் (Mukesh Kumar பிறப்பு: அக்டோபர் 12, 1993) இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்ட வீரர் ஆவார் .[2] சூலை 2023 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகத் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[3] இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காகவும், உள்ளூர்ப் போட்டிகளில் மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடுகிறார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

முகேஷ் குமார் 12 அக்டோபர் 1993 இல் பீகார், கோபால்கஞ்ச் மாவட்டத்தில்பிறந்தார் [2] 2012ல் கொல்கத்தாவில் தானுந்து வியாபாரம் செய்து வந்த தந்தையின் வற்புறுத்தலின் பேரில் அங்கு சென்றார். [4]

தொழில் வாழ்க்கை

உள்ளூர்ப் போட்டிகள்

2015-16 ரஞ்சிக் கோப்பையில் அக்டோபர் 30 அன்று தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். [5] 2015-16 விஜய் அசாரே கோப்பையில் 13 திசம்பர் 2015 அன்று பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார். [6] 2015-16 சையது முஷ்டாக் கோப்பையில் 6 சனவரி 2016இல் இருபது20 போட்டியில் அறிமுகமானார். [7]

சர்வதேச வாழ்க்கை

செப்டம்பர் 2022 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார்.திசம்பர் 2022 இல், இலங்கைக்கு எதிரான பன்னாட்டு இ20 தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [8] சூன் 2023 இல், மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான மூன்று வகையான போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெற்றார். [9] [10] சூலை 20,2023 இல்டிரினிடாட்டின் போர்ட் ஆஃப் ஸ்பெயின் குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற தொடரின் இரண்டாவது தேர்வுப் போட்டியில் இவர் அறிமுகமானார். [11]

ஆகத்து, 2023 இல் டிரினிடாட்டின் தருபாவில் உள்ள பிரையன் லாரா அரன்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் அறிமுகமானார். [12]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads