முக்கா மாவட்டம்

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

முக்கா மாவட்டம்map
Remove ads

முக்கா மாவட்டம் (மலாய் மொழி: Daerah Mukah; ஆங்கிலம்: Mukah District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; முக்கா பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். முக்கா மாவட்டத்தின் தலைநகரம் முக்கா (Mukah) நகரம்.[1]

விரைவான உண்மைகள் முக்கா மாவட்டம் Mukah DistrictDaerah Mukah, நாடு ...

1911-இல் ஜேம்சு புரூக் வம்சாவளியினர் காலத்தின் போதே ​​முக்கா நகரம் செயல்பாட்டில் இருந்தது. ​​முக்கா நகரம் அப்போது மூன்றாம் பிரிவின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. அந்தக் கட்டத்தில் மூன்றாம் பிரிவின் ஆணையராக இருந்தவர் என்றி எர்பர்ட் கோர்ட்ரைட் (Henry Herbert Kortright).

Remove ads

பொது

மார்ச் 1, 2002-இல் முக்கா மாவட்டம் நிறுவப்பட்டபோது, ​​அதன் ஆட்சி வரம்பு 5,020 சதுர கிலோமீட்டரில் இருந்து 2,536 சதுர கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டது.[2]

வரலாறு

மெலனாவு மக்கள்தான் முக்காவில் முதன்முதலில் வாழ்ந்த பழங்குடியினக் குழுவாகும். முக்காவின் தொடக்கக்கால ஆவணங்கள் மயாபாகித் பேரரசின் வரலாற்றில் காணப்படுகின்றன. "மெலனோ" என்று அழைக்கப்படும் ஓர் இடம் மயாபாகித் பேரரசுக்குத் திறை செலுத்தியாகவும் அறியப் படுகிறது.

பின்னர் மெலனோ எனும் அந்த இடம் 13-ஆம் நூற்றாண்டில் புரூணை பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. 1860-இல், அந்த இடம் சரவாக் வெள்ளை இராஜாக்களுக்கு விற்கப்பட்டது.[3]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads