முவாலிம் மாவட்டம்
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முவாலிம் (மலாய்: Daerah Muallim); (ஆங்கிலம்: Muallim District) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள பதினொன்றாவது மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் எல்லையில் பேராக் மாநிலத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்து உள்ளது. முவாலிம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் தஞ்சோங் மாலிம்; சிலிம் ரீவர்; புரோட்டோன் சிட்டி.
பேராக் மாநிலத்தின் தற்போதைய சுல்தான் நஸ்ரின் முயிசுடீன் ஷா அவர்கள் (Sultan Nazrin Muizzuddin Shah) 2016 ஜனவரி 11-ஆம் தேதி, தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றக் கட்டிடத்தில், முவாலிம் மாவட்டம் தோற்றுவிக்கப் படுவதாக அறிவித்தார்.[1] இந்த முவாலிம் மாவட்டம் முன்பு பத்தாங் பாடாங் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[2] இந்த மாவட்டம் 93,435 ஹெக்டர் நிலப்பரப்பை உள்ளடக்கியது.[3]
Remove ads
பொது
முவாலிம் என்பது ஓர் அரபுச் சொல். "ஆசிரியர்" என்று பொருள். சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் இங்கு இருப்பதால் முவாலிம் எனும் பெயர் வழங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் பிரித்தானியக் காலனித்துவ காலத்தில் இருந்து பல்லாயிரம் ஆசிரியர்களை உருவாக்கி உள்ளது.[4]
நிர்வாகப் பிரிவுகள்

முவாலிம் மாவட்டம் இரு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது, அவை:[3]
உலு பெர்ணம் (கிழக்கு மற்றும் மேற்கு) சிலிம் ரீவர்
உலு பெர்ணம் துணை மாவட்டத்தின் கிழக்கு மேற்கு பகுதிகள் சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியான உலு பெர்ணம் நகரத்தால் பிரிக்கப்பட்டு உள்ளன.
மலேசிய நாடாளுமன்றம்
முவாலிம் மாவட்டத்தில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி. தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதி. இந்தத் தொகுதி முவாலிம் மாவட்டத்தை முழுமையாக உள்ளடக்கியது. அதே வேளையில் பேராக் மாநில சட்டமன்றத்திற்கு இந்த மாவட்டம் இரண்டு மாநிலத் தொகுதிகளை வழங்குகிறது.
பேராக் மாநிலச் சட்டமன்றம்
பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் முவாலிம் மாவட்டத்தின் பிரதிநிதிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads