முஷ்டாக் அஹமது சர்கார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முஷ்டாக் அஹமது சர்கார் (Mushtaq Ahmed Zargar) இந்தியாவின் சிறிநகரில் 1967 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் அங்குள்ள ஜூம்மா மசூதியில் வளந்தவர். தனது 17 ஆம் வயதில் இஸ்லாமியப் போராளிக்குழுக்களின் மீது ஆர்வம் ஏற்பட்டது. 1984 ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஸ்மீர் விடுதலை முன்னணியில்(Jammu and Kashmir Liberation Front) உறுப்பினரானார். 1988 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாகிஸ்தானுக்குச் சென்று பயிற்சி பெற்றார். பின்னர் 1989 ஆம் ஆண்டு மேல்மட்டப் பயிற்சிக்காக மீண்டும் பாகிஸ்தான் சென்றார். 189 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட பயிற்சி முடிந்து இந்தியா திரும்பியதும் அவரது ஒரு யோசனை ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணியில் நிராகரிக்கப்படுகிறது. எனவே அல்-உமர்-முஜாகிதீன் என்ற போராளிக் குழுவைத் தொடங்கினார். அதற்கு பாகிஸ்தான் நிதி உதவி அளித்தது. முஷ்டாக் அஹமது சர்கார் இந்திய அரசால் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தியதி காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஆஃப்கான் தீவிரவாதிகள் ஐ.சி 814 விமானத்தை அதன் பயணிகளுடன் கடத்தி இவரை விடுவித்தனர். அதன் பின் அவர் பாகிஸ்தானில் உள்ளார்.[1]
Remove ads
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads