மூசா தக்ரி அருங்காட்சியகம்

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மூசா தக்ரி அருங்காட்சியகம் (Musa Dakri Museum) என்பது உத்தரப்பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.[1] இது கென்னடி அறையில் வைக்கப்பட்டுள்ளது.[2]

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...

வரலாறு

பல்கலைக்கழகத்தின் முதல் அருங்காட்சியகம் நிஜாம் அருங்காட்சியகம் ஆகும். சர் சையத் தொல்லியல் அருங்காட்சியகம் 1950களில் நிறுவப்பட்டது.

மூசா தக்ரி அருங்காட்சியகம் 2014-இல் இந்த இரு அருங்காட்சியக சேகரிப்புகளின் இணைப்பால் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு US$500,000 நன்கொடையாக வழங்கிய மூசா தக்ரியின் நினைவாக இது பெயரிடப்பட்டது.[3][4] 2014ஆம் ஆண்டு மாற்றப்பட இருந்த சில தொல்பொருட்கள் காணாமல் போயின.[5]

தொகுப்புகள்

சர் சையத் மாடம்

பல்பன் காலத்துக் கல்வெட்டு ஒன்று இங்கு வைக்கப்பட்டுள்ளது.[6]

ஆர். சி. கவுர் மாடம்

இந்த மாடத்தில் அட்ராஞ்சி கெடாவிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள் உள்ளன.[6][7]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads