மைத்திரேயி கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

மைத்திரேயி கல்லூரிmap
Remove ads

மைத்திரேயி கல்லூரி (Maitreyi College) என்பது தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இது இந்தியாவின் புது தில்லி -சாணக்யபுரி, பாபு தாமில் அமைந்துள்ளது. இக்கல்லூரி சூலை 1967-இல் நிறுவப்பட்ட இக்கல்லூரிக்கு வேத முனிவர் மைத்ரேயியின் பெயரிடப்பட்டது.[3] இந்த மகளிர் கல்லூரி, அறிவியல், கலை, வணிகத் துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. இக்கல்லூரியானது இந்திய அரசின் உயிரிதொழில்நுட்பவியல் துறையினால் நட்சத்திரக் கல்லூரியாக அங்கீகரிக்கப்பட்டு, தாவரவியல், விலங்கியல், வேதியியல், கணிதம் ஆகிய நான்கு அறிவியல் துறைகளுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...

2024ஆம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் தரவரிசையில் இந்தியாவின் கல்லூரிகளில் இது 29ஆவது இடத்தில் உள்ளது.[4] இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் ஏ+ + தர அங்கீகாரம் பெற்றுள்ளது.[5]

இளஞ்சிவப்பு வழித்தடம் தில்லி மெட்ரோவின் கட்டுமானம் காரணமாக, மைத்திரேயி கல்லூரியை இந்தப் பயணத்தடம் மூலம் எளிதாக அணுக முடியும். இக்கல்லூரியின் அருகிலுள்ள மெட்ரோ நிலையம் துர்காபாய் தேசுமுக் தெற்கு வளாக மெட்ரோ நிலையம் ஆகும். இது இக்கல்லூரியிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.[6]

Remove ads

கல்வி படிப்புகள் மற்றும் துறைகள்

மைத்திரேயி கல்லூரி பல்வேறு இளநிலை, முதுநிலைப் படிப்புகளை வழங்குகிறது.

  • மூன்று ஆண்டு இளநிலை திட்டம்
  • இரண்டு வருட முதுநிலை திட்டம்

மூன்று ஆண்டு இளங்கலை திட்டங்கள்

  • இளநிலை அறிவியல் (இயற்பியல், வேதியியல் / கணினி அறிவியல், கணிதம்)
  • உயிர் அறிவியல் இளநிலை அறிவியல் திட்டம் (தாவரவியல் வேதியியல், விலங்கியல்)

இரண்டு வருட முதுகலை திட்டங்கள்

  • அரசியல் அறிவியலில் முதுநிலை
  • கணிதத்தில் முதுநிலை
Remove ads

விருதுகள்

மைத்திரேயி கல்லூரியில் உள்ள புல்வெளிகளி பல விருதுகளை வென்றுள்ளது. தில்லி பல்கலைக்கழக வருடாந்திர மலர் கண்காட்சி 2018-இல் கல்லூரிக்குச் சிறந்த புல்வெளிக்கான 'தி தேசப்பந்து கல்லூரி கோப்பையும்' சிறந்த தோட்டத்திற்கான 'பாரசீக கோப்பையும்' வழங்கப்பட்டது. வெவ்வேறு வெட்டுப் பூ பிரிவுகளில் கல்லூரி 17 பரிசுகளை வென்றது. கல்லூரியின் தோட்டக்காரர், சிறிராம் பகதூர் 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த மாலி என்ற பட்டத்தைப் பெற்றார்.[7]

Remove ads

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

  • பிரியங்கா போசு, நடிகையும் வடிவழகியும்
  • சுகந்தா கார்க், நடிகை, பாடகி, தொலைக்காட்சி தொகுப்பாளர்
  • மாலினி அகர்வால், பிரபலப் பதிவர், MissMalini.com நிறுவனர் & வலைப்பூ பதிவர், வானொலி தொகுப்பாளர்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads