மையம் மற்றும் மேற்கு மாவட்டம் (ஹொங்கொங் தீவு)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மையம் மற்றும் மேற்கு மாவட்டம் (Central and Western District) ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். அதேவேளை ஹொங்கொங் தீவில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்றும் ஆகும். இந்த மாவட்டங்களில் மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டில் கணிப்பின் படி 261,884 ஆகும். ஹொங்கொங்கில் மக்கள் அடர்த்தி கூடிய மாவட்டங்களில் இந்த மாவட்டம் இரண்டாம் நிலையில் உள்ளது. இந்த மாவட்டத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாவட்டமாகவும், அதிகமான வருமானம் ஈட்டுவோரின் நிலை இரண்டாம் நிலையாகவும் உள்ளது. இதில் மையம் பகுதி வணிகப் பகுதியாகவும், இம்மாவட்டத்தின் மேற்கு பகுதியான செக் டொங் சுயி, கென்னடி பட்டனம், சயி யிங் பூன் போன்ற நகரங்களை உள்ளடக்கியப் பகுதியாகவும் உள்ளது. பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றியப் பொழுது, இப்பகுதி விக்டோரியா நகரம் எனப் பெயரிடப்பட்டது. இப்பெயர் தற்போது பெரும்பாலும் வழக்கில் இல்லை. அத்துடன் பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றி மக்கள் குடியிருப்புக்களை உருவாக்கியப் போது முதல் குடியிருப்பு உருவாக்கப் பகுதிகளில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

Remove ads
சொல்விளக்கம்
"மையம் மற்றும் மேற்கு மாவட்டம்" எனும் சொற்றொடரில் உள்ள "மையம்" எனும் சொல் ஒரிடத்தின் மையத்தைக் குறிக்கிறது எனினும், இம்மாவட்டம் ஹொங்கொங் தீவின் மையத்தில் உள்ள ஒரு நகரமாகவோ அல்லது ஹொங்கொங் ஆட்சிப் பரப்பின் மையமாகவோ அல்லாமல், விக்டோரியா துறைமுகத்திற்கு முகப்பாக உள்ள ஒரு மையம் (Central) எனும் பெயர் வழங்கல் ஊடாக ஏற்பட்ட பெயராகும். இருப்பினும் இந்த நகரை தமிழிலும் பேச்சி வழக்கில் "சென்ட்ரல்" என்றே அழைக்கப்படுகின்றது.
Remove ads
வரலாறு


இன்று மைய மாவட்டமாக விளங்கும் நிலப்பரப்பு பிரித்தானியர் ஆட்சியின் போது விக்டோரியா நகரம் என அழைக்கப்பட்ட இடமாகும். ஹொங்கொங் பிரித்தானியக் குடியேற்ற நாடாக பிரகடனப்படுத்தியதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதலாவது நகரமயமாக்கல் திட்டம் இந்த மாவட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. பிரித்தானியர் 1841ல் ஹொங்கொங்கை கைப்பற்றி, பிரித்தானியக் கொடியை பறக்கவிட்டதன் பின்னர், கிட்டத்தட்ட ஆறு மாதங்களின் பின் மையம் பகுதிகளில் உள்ள நிலங்கள் வணிகர்களுக்கு விற்கப்பட்டது. தற்போது பூங்கா வீதி மற்றும் கிளேநியலி வீதி இரண்டும் முதற்கட்டமாக பிரித்தானியரின் போக்குவரத்து தேவைக்காக திறக்கப்பட்டன.[1] அக்காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட நகரங்களே சய் யிங் பூன், சுங் வான், டய் பிங் சான் மற்றும் மையம் போன்றவைகளாகும்.
1857 களில் இந்த விக்டோரியா நகரப் பகுதியை ஏழு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் தற்போது மையம் மற்றும் மேற்கு நகரப்பகுதியாகக் காணப்படுகின்றன. இந்த பகுதி முழுமையாகவும் 1860 ஆம் ஆண்டுகளின் சீன வணிகர்கள் விலைக்கு வாங்குவரை ஐரோப்பியர்களின் சொத்தாகவே இருந்தன. இந்த மைய மாவட்டம் ஐரோப்பியர்களின் பிரதான வணிக மாவட்டமாகவே இருந்தது. சீன வணிகர்கள் ஹொங்கொங்கில் நிலைக்கொள்ளத் தொடங்கியதைத் தொடர்ந்து, சீனா மற்றும் ஐரோப்பியா இடையிலான வணிகத் தேவைக்கு ஒரு வங்கி தேவைப்பட்டது. (அபினி வணிகம் உட்பட) அதனால் உருவாக்கப்பட்ட வங்கியே தற்போதும் மையம் நகரத்தில் காணப்படும் ஹொங்கொங் சங்காய் வங்கிக் கூட்டுத்தாபனம் ஆகும். அதனைத் தொடர்ந்து ஹொங்கொங் தீவின் மேற்கு பகுதி சீன வணிகர்களின் வணிக மையமானது. இவ்வாறு மையம் மாவட்டத்தின் வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி காரணமாக அம்மாவட்டத்தின் பெறுமதி உயரத் தொடங்கியது. அதனால் 1866 களில் இம்மாவட்டத்தைக் காவல் செய்வதற்கும் பாதுக்காப்பதற்கும் என "மாவட்ட கண்காணிப்பு படை" ஒன்று உருவாக்கப்பட்டது[2].
1890 களில் ஹொங்கொங்கின் மக்கள் தொகை கணப்பிட்டதைத் தொடர்ந்து ஏறத்தால 200,000 குடும்பங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. இதில் அதிகமானோர் வசித்தது விக்டோரியா நகரப் பகுதியில் ஆகும்.[3].
Remove ads
அரசியல்
ஹொங்கொங் அரசாங்கத்தின் மாவட்ட சபைகளுக்கு பிரதானமான வரையறுக்கப்பட்ட அதிகாரங்களாவன, பிரதானமாக கட்டடங்கள், குன்றுகள், திறந்தவெளி இடங்கள், புணரமைத்தல், பண்பாட்டு செயல்திட்டங்கள், சுற்றுலா துறையை மேம்படுத்தல் போன்றவைகளாகும். அத்துடன் மாவட்ட சபை தேர்தல்கள் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெறும். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட தேர்தலின் படி 15 உறுப்பினர்கள் தோற்றதுடன், நான்கு பேர் ஹொங்கொங் அரசால் நியமனம் பெற்றனர்.
மையம் மாவட்டத்தின் பிரதான இடங்கள்
- மையம்
- நடு-மட்டம் கிழக்கு
- கோட்டை வீதி
- விக்டோரியா சிகரம்
- கென்னடி நகரம்
- குன் லுங்
- சய் வான்
- பெல்ச்சர் குடா
- செக் டொங் சுயி
- சய் யிங் பூன்
- டுங் வா
- மைய வீதி
- தண்ணீர் வீதி
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads