மையிட்டான்பட்டி

மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

மையிட்டான்பட்டி
Remove ads

மையிட்டான்பட்டி (Maittanpatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.[1]

Thumb
தேசிய நெடுஞ்சாலை 7-ல் மையிட்டான்பட்டி பேருந்து நிறுத்தம்
விரைவான உண்மைகள் மையிட்டான்பட்டி, நாடு ...
Remove ads

நிலவியல்

மையிட்டான்பட்டியின் அமைவிடம் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை முறையே 9°40' N மற்றும் 77°57'E ஆகும். இக்கிராமம் கள்ளிக்குடியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது

மக்கள்தொகை

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மையிட்டான்பட்டியின் மக்கள் தொகை 1,629ஆக உள்ளது. இதில் 823 பேர் பெண்கள் மற்றும் 806 பேர் ஆண்கள் ஆவர்.[2]

போக்குவரத்து

பேருந்து எண் 13 விருதுநகருக்கு 2 முறையும், திருமங்கலம், மதுரைக்கு 4 முறையும் சென்று வருகின்றது. பேருந்து எண் 48PM மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்குத் தினமும் 3 முறை பயணிக்கின்றது.

கல்வி நிறுவனங்கள்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முதல் வகுப்பு முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கான கல்வியை வழங்குகிறது. மதுரை-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 7-ஐ ஒட்டி காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் மையிட்டான்பட்டியில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads