தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 7 (தெ. நெ. 7)(National Highway 7 (India)) என்பது இந்தியாவில் பாசில்காவையும் (பஞ்சாப்) மனாவையும் (உத்தராகண்டம்) இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும். இது இந்திய மாநிலங்களான பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் வழியாகச் செல்கிறது.[1]

Thumb
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்
விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...

தேசிய நெடுஞ்சாலை 7 (பழைய தேசிய நெடுஞ்சாலை-58) இந்து சமய மையங்களான ரிசிகேசு, தேவ் பிரயாக், ருத்திரபிரயாகை, கர்ணபிரயாகை, சமோலி, ஜோஷி மடம், பத்ரிநாத் தேராதூன், சண்டிகர் நகரங்களை இணைக்கிறது. சிறி கேம்குந்த் சாகிபுக்கு பயணிக்கும் யாத்ரீகர்கள் ஜோசி மடம் மற்றும் பத்ரிநாத் இடையே தே. நெ. 7-இல் அமைந்துள்ள கோவிந்த்காட்டி சென்று பயணிக்கின்றனர்.

இந்த நெடுஞ்சாலை பொதுவாக குளிர் அதிகம் நிலவும் மாதங்களான திசம்பர், சனவரி, பிப்ரவரி, மார்ச்சு மாதங்களில் இமயம்லையின் மேற்பகுதிகளில் மூடப்படுகிறது. இது இந்தியா/திபெத்து எல்லை அருகே மணா கணவாய்க்குச் செல்கிறது.

Remove ads

வழித்தடம்

தேசிய நெடுஞ்சாலை 7-இன் வழித்தடமானது இந்தியாவின் பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2] இந்தத் தேசிய நெடுஞ்சாலை சுமார் 845 கிமீ (525 மைல்) நீளம் கொண்டது.[3]

பஞ்சாப்

தேசிய நெடுஞ்சாலை 7 இந்தியா-பாக்கித்தான் எல்லையிலிருந்து தொடங்கி, பாசில்கா, அபோஹர், மலோட், கிதர்பாகா, பதிண்டா, ராம்புரா புல், பர்னாலா, சங்க்ரூர், பட்டியாலா, ராஜ்புரா, பானூர், ஜிராக்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அரியானா எல்லை வரை செல்கிறது.[4]

அரியானா

தேசிய நெடுஞ்சாலை 7, ஜிராக்பூருக்கு அருகிலுள்ள பஞ்ச்குலாவினை அரியானா மாநிலத்தில் உள்ள சாஜத்பூர் மற்றும் நரைன்கருடன் இணைக்கிறது.

இமாச்சலப் பிரதேசம்

தேசிய நெடுஞ்சாலை 7 இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள காலா அம்பை பான்டா சாகிபுடன் நகரங்களை இணைக்கிறது.[5]

உத்தராகண்டம்

தேசிய நெடுஞ்சாலை 7 உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள இந்தோ/திபெத் எல்லையில் தேராதூன், ரிசிகேசு, தேவபிரயாக், ருத்ராப்பிரயாக், கர்ணபிரயாக். சமோலி, பத்ரிநாத், மானா ஆகிய நகரங்களை இணைக்கிறது.[6]

Remove ads

சந்திப்புகள்

பஞ்சாப்
தே.நெ. 62 அபோகர் அருகே[3]
தே.நெ. 9 மலோட் அருகே
தே.நெ. 354 மலோட் அருகே
தே.நெ. 754 பதிண்டா அருகே
தே.நெ. 54 பதிண்டா அருகே
தே.நெ. 254 ராம்புரா பூல் அருகே
தே.நெ. 703 பர்னாலா அருகே
தே.நெ. 52 சங்க்ரூர் அருகே
தே.நெ. 44 ராஜ்புரா அருகே
தே.நெ. 205A பானூர் அருகே
தே.நெ. 152 ஜிராக்பூர் அருகே
அரியானா
தே.நெ. 5 பஞ்ச்குலா அருகே
தே.நெ. 344 சாஜத்பூர் அருகே
இமாச்சலப் பிரதேசம்
தே.நெ. 907A நகான் அருகே
தே.நெ. 907 பான்டா சாகிப் அருகே
தே.நெ. 707 பாவோண்டா சாஹிப் அருகே
உத்தராகண்டம்
தே.நெ. 507 கெர்பர்ட்பூர் அருகே
தே.நெ. 307 தேராதூன் அருகே
தே.நெ. 34 ரிசிகேசு அருகே
தே.நெ. 707A மலேதா அருகே
தே.நெ. 309 சிறிநகர் அருகே
தே.நெ. 107 ருத்ராப்பிரயாக் அருகே
தே.நெ. 109 கர்ணப்பிரயாக் அருகே
தே.நெ. 107A சமோலி அருகே[3]

சாலை முடிவுறும் இடம் சுமார் 3200 மீட்டர் உயரத்தில் உள்ள மானா கிராமத்திற்கு அருகில் உள்ளது.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads