யூனிவர்சல் ஸ்டூடியோஸ், சிங்கப்பூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யூனிவர்சல் ஸ்டூடியோஸ், சிங்கப்பூர் என்பது, சிங்கப்பூரின், செந்தோசாத் தீவில் அமைந்துள்ள ஒரு கேளிக்கைப் பூங்கா ஆகும். இது சிங்கப்பூரின் இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட உல்லாசப்பகுதி. இதைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் மலேசிய நிறுவனமான யென்டிங் குழுமத்துக்கு வழங்கப்பட்டது குறித்து 2006 டிசம்பர் 8 ஆம் தேதி சிங்கப்பூர் அரசு அறிவித்தது. கட்டிடவேலைகள் 2007 ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கின. இதுவே ஆசியாவில் யூனிவர்சல் ஸ்டூடியோசின் இரண்டாவது கேளிக்கைப் பூங்காவும், தென்கிழக்காசியாவின் முதலாவது கேளிக்கைப் பூங்காவும் ஆகும். இது திறந்துவைக்கப்பட்டதன் பின்னர் ஒன்பது மாதத்தில் 2 மில்லியன் மக்கள் வருகைதந்துள்ளனர்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads