யூமா வாசுகி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தி. மாரிமுத்து என்ற இயற்பெயர் கொண்ட யூமா வாசுகி (பிறப்பு: 23 சூன் 1966) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், கவிஞர், புனைகதையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஓவியர் ஆவார். மலையாள எழுத்தாளர் ஓ. வி. விஜயன் எழுதிய `கசாக்கிண்ட இதிகாசம்' எனும் நூலை ‘கசாக்கின் இதிகாசம்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக, பிற மொழியிலிருந்து தமிழுக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புக்காக 2017- ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது இவருக்கு அளிக்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் யூமா. வாசுகிYouma. Vasugi, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் 23 சூன் 1966 அன்று பிறந்தார் மாரிமுத்து.[2] கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றார். `தோழமை இருள்', `இரவுகளின் நிழற்படம்', `அமுத பருவம்', `வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும், `உயிர்த்திருத்தல்' எனும் சிறுகதைத் தொகுப்பும், `ரத்த உறவு', `மஞ்சள் வெயில்' ஆகிய நாவல்களும் எழுதியுள்ளார். தனித்த மொழிநடையால் தமிழ்க் கவிதைப் பரப்பில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் எழுதிய "ரத்த உறவு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. குழந்தைகள் குறித்து இவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘சாத்தானும் சிறுமியும்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது.[3]

Remove ads

படைப்புகள்

சிறுகதைத் தொகுப்பு

  1. உயிர்த்திருத்தல் 2001[4]
  2. தூயகண்ணீர் (சிறார் கதை) - 2019

கவிதைத் தொகுப்புகள்

  1. தோழமை இருள்
  2. இரவுகளின் நிழற்படம்
  3. அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு
  4. யூமா வாசுகி கவிதைகள்

மொழி பெயர்ப்புகள்

  1. சிங்கிஸ் ஐத்மாத்தவின் சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று,
  2. ஆண்டர்சன் கதைகள்
  3. ஜோனதன் ஸ்விஃப்ட்டின் கலிவரின் பயணங்கள்
  4. எஸ். சிவதாஸின் ‘மாத்தன் மண்புழுவின் வழக்கு (மலையாளத்திலிருந்து)
  5. ஓ. வி. விஜயனின் ‘கஸாக்குகளின் இதிகாசம் (மலையாளத்திலிருந்து)
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads