ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் (ஆங்கிலம்: Rangarajan Mohan Kumaramangalam) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், தொழிற்பண்பாளர் காங்கிரஸ் பிரிவின் தலைவரும் ஆவார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
இவர் சென்னையில் வாழ்ந்த ப. ரங்கராஜன் குமாரமங்கலம் -கிட்டி குமாரமங்கலம் இணையரின் மகனாக 06 ஜூலை 1978 அன்று பிறந்தார். இவரின் தாத்தா மோகன் குமாரமங்கலம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார்.இவரின் தந்தை வழி கொள்ளுத் தாத்தா ப. சுப்பராயன் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர்.இவர் அமிா்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு இஷாந்த் மற்றும் ருத்ரா என்ற இரு மகன்கள் உள்ளனர்.[1]
அரசியல் வாழ்க்கை
இவர் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக உள்ளார்.[2][3][4][5] மேலும் அகில இந்திய தொழில் வல்லுநா் காங்கிரஸ் தென்னிந்திய தலைராகவும் உள்ளார். தற்போது 2021 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.[6][7][8]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads