ரங்கராஜபுரம் இடும்பேசுவரசுவாமி கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீ ரங்கராஜபுரம் இடும்பேசஸ்வர சுவாமி கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
![]() | இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
Remove ads
அமைவிடம்
இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரங்கராஜபுரம் என்னுமிடத்தில் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது.[1]
தல வரலாறு
இத் தலத்திற்கு இப் பெயரை சூட்டியவர் மகா விஷ்ணு மண்ணியாற்றில் நீராடிவிட்டு இத்தலத்து இறைவனை ஆராதிக்க வந்த மகா விஷ்ணு இத்தலத்துக்கு அரங்கராஜபுரம் என பெயர் சூட்டினார். அதுவே தற்போது ஸ்ரீ ரங்கராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது. இறைவனை
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக இடும்பேசுவரசுவாமி உள்ளார். இங்குள்ள இறைவி குசும குந்தலாம்பிகை ஆவார். மூலவர் அக்னிதேவனால் அமைக்கப்பட்டதாகக் கூறுவர்.[1]
சிறப்பு
வனவாசத்தில் இருந்த, பாண்டவர்களில் ஒருவரான பீமன், நள்ளிரவில் இடும்பனைக் கொன்றதால் அவர் பிரம்மஹத்தி தோஷத்தினால் பாதிக்கப்பட்டார். இக்கோயிலுக்கு வந்து இறைவனை வணங்கிய நிலையில் அவருக்கு தோஷம் நீங்கியது. அவர் இறைவனை இடும்பேசுவர சுவாமி என்று அழைத்தார். அப்பெயரே மூலவருக்கு அமைந்துவிட்டது.[1]
திருவிழாக்கள்
ஐப்பசி பௌர்ணமி, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads