ரவிதாசர் படித்துறை
வாரணாசியில் அமைந்துள்ள ஒரு படித்துறை From Wikipedia, the free encyclopedia
Remove ads
துறவி ரவிதாசர் படித்துறை வாரணாசியின் தெற்கே அமைந்துள்ள மிகப்பெரிய படித்துறை ஆகும். [1] வாரணாசியின் பெரும்பாலான பார்வையாளர்களுக்கு, இது ஒரு முக்கியமான ரவிதாசிய மத இடமாக அறியப்படுகிறது. "துறவி ரவிதாசர் சமாராக பூங்கா" என்று அழைக்கப்படும் பூங்கா ஒன்று 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[2] [3] [4]
2008 பிப்ரவரியில் இந்த படித்துறை உருவாக்கப்பட்டது.[5] [6] ரவிதாசரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் வாரணாசியில் உள்ள சீர் கோவர்தன்பூர் கிராமக் கோவிலில் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் கொண்டாடப்படுகிறது. [7] மேலும் இந்திய அரசு இதை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டில் ரவிதாசரின் 631வது பிறந்த நாள் அன்று துறவி ரவிதாசர் கோவிலிலிருந்து தங்கப் பல்லக்கு ஊர்வலத்துடன் அப்போதைய முதல்வர் மாயாவதி குமாரி தொடங்கி வைத்தார்.[8] [9]
Remove ads
சுற்றுலா
சூடேற்றப்பட்ட ஹீலியம் வாயு நிம்பிய பலூன் சவாரி வசதி இங்குள்ளது.[10] இந்தப் படித்துறை பொழுதுபோக்குக்காகவும், தேவ் தீபாவளி, கங்கை மகோத்சவம் போன்ற பண்டிகைகளிலும் பயணிகள் அடிக்கடி வருகை தரும் படித்துறைகளில் ஒன்றாகும்.[11] இந்தப் படித்துறை, வாரணாசியின் துறவி ரவிதாசர் ஜனம் அஸ்தானி கோயிலிருந்து கிட்டத்தட்ட 13 நிமிட பயணத்தில் உள்ளது.[12] குரு ரவிதாசரின் பக்தர்களால் இந்த இடம் மத சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமானது. [13]
Remove ads
இதையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads