ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசல், சித்தார்த்நகர்

From Wikipedia, the free encyclopedia

ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசல், சித்தார்த்நகர்map
Remove ads

ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசல் (Jama Masjid Rahmaniya) நேபாள நாட்டின் நேபாள மாநில எண் 5 மாநிலத்தில் ரூபந்தேஹி மாவட்டத்தில் சித்தார்த்நகர் ஊரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் கி.பி.1950 இல் கட்டப்பட்டது .இப்பள்ளிவாசல் நேபாள நாட்டின் பழமையான பள்ளிவாசல் ஆகு‌ம்.

விரைவான உண்மைகள் ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசல், சித்தார்த்நகர், அடிப்படைத் தகவல்கள் ...
Remove ads

அமைவிடம்

இப்பள்ளிவாசல் நேபாள நாட்டின் நேபாள மாநில எண் 5 மாநிலத்தில் ரூபந்தேஹி மாவட்டத்தில் சித்தார்த்நகர் ஊரில் அமைந்துள்ளது.சித்தார்த்நகரின் பழைய பெயர் பைரவா ஆகும்.[1]

மதரசா

Thumb
மதரசா

மதரசா அரேபியா அன்சாரியை பைசுல் இசுலாம் என்பது ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இயங்கும் மதரசா ஆகும்.இந்த மதரசா கி.பி.1950 இல் கட்டப்பட்டது.[2] தற்போது இங்கு 200 இசுலாமிய மாணவர்கள் பயில்கின்றனர்.இங்கு அரபி, பார்சி, உருது, ஆங்கிலம், நேபாளி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் போதிக்கப்படுகின்றன.மதரசா அரசாங்கம் அனுமதி பெற்று இயங்கி வருகிறது.[3]

அஹ்லே சுன்னத் ஜமாத்

அஹ்லே சுன்னத் ஜமாத் (Ahle Sunnat Wa Jamat Anjuman Islamiya Committee,Hindi:अहले सुन्नत व जमात अन्जुमन इस्लामिया कमिटी, Urdu:اہلسنت و جماعت انجمن اسلامیہ کمیٹی) நிர்வாகிகள் குழு இப்பள்ளிவாசல் மற்றும் மதரசாவை நிர்வகிக்கிறது.இந்த குழு தேர்தல் மூலம் தேர்வு செய்ய படுகிறது.[4]

27.5000°N 83.4500°E / 27.5000; 83.4500

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads