லும்பினி மாநிலம்
நேபாள நாட்டின் மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
லும்பினி மாநிலம்[1] 20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக நிறுவப்பட்ட, நேபாளத்தின் ஏழு மாநிலங்களில் ஒன்றாகும். முன்னர் இம்மாநிலத்தின் பெய்ராக நேபாள மாநில எண் 5 என இருந்தது.
2015 நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் [1], பட்டியல் எண் 4-இன் படி, நிர்வாக வசதிக்காக, 75 மாவட்டங்களைக் கொண்டு புதிதாக துவக்கப்பட்ட ஏழு நேபாள மாநிலங்களின் ஒன்றாகும்.
இம்மாநில அமைச்சரவை தீர்மானத்தின் படி, பூத்வல் நகரம், 17 சனவரி 2018 அன்று, இம்மாநிலத்தின் இடைக்காலத் தலைநகராக அறிவிக்கப்பட்டது. இம்மாவட்டம் 13 மாவட்டங்களைக் கொண்டது.
லும்பினி மாநிலம், 22,288 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 48,91025 மக்கள் தொகையும், 12 மாவட்டங்களையும் கொண்டுள்ளது.
Remove ads
அமைவிடம்
லும்பினி மாநிலத்தின் வடக்கிலும், வடகிழக்கில் நேபாள மாநில எண் 4, வடமேற்கில் நேபாள மாநில எண் 6, மேற்கில் நேபாள மாநில எண் 7, தெற்கில் இந்தியா, எல்லைகளாக அமைந்துள்ளது.
மாவட்டங்கள்
இம்மாநிலத்தின் 13 மாவட்டங்களின் விவரம்:
அரசியல்
இம்மாநிலம் 87 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. அதில் 52 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 35 உறுப்பினர்கள் விகிதாசாரத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்மாநிலத்திலிருந்து நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 26 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறது. இம்மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக சங்கர் பொக்ரோல் பிப்ரவரி, 2018ல் பதவியேற்றார்.
மாநில சட்டமன்றத் தேர்தல், 2017 முடிவுகள்
2017ல் நடைபெற்ற இம்மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், இம்மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் மற்றும் மாவோயிஸ்ட் மையம் இணைந்து கூட்டணி அரசை நிறுவியுள்ளது. கூட்டணி அரசின் முதலமைச்சராக சங்கர் பொக்ரேல் , மாநில ஆளுநனரால் 14 பிப்ரவரி 2018 அன்று நியமிக்கப்பட்டார்.[2] இம்மாநில சட்டமன்றத்தின் முதன்மை எதிர்கட்சி நேபாளி காங்கிரஸ் ஆகும்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads