ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஸ் தீவு (Ross Island) (அரசு ஏற்புப் பெற்ற பெயர்: நேதாஜி சுபாஷ் சந்திரபோசு தீவுகள்) அந்தமான் தீவுக் கூட்டதில் உள்ள ஒரு தீவாகும். தற்போது முழுவதுமாக சிதைந்த நிலையிலுள்ள பழைய கட்டடங்களை மட்டுமே கொண்டிருக்கும் இத்தீவு 1941 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு முன்புவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் நிர்வாக தலைமையகமாய் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு போர்ட் பிளேருக்குத் தலைமையகம் மாற்றப்பட்டது. இத்தீவு தற்போது இந்தியக் கடற்படையால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தமானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும் பார்க்கும் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக இத்தீவு விளங்குகிறது.
Remove ads
வரலாறு
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் போது 1857-இல் ஏற்பட்ட கலங்களுக்குப் பிறகு ஆங்கில அரசு அந்தமானில் சிறை ஒன்றைக் கட்டி அங்கு போராட்ட வீரர்களை அடைத்தது. அக்கால கட்டத்தில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்திற்கும் தங்கியிருப்பதற்கும் இத்தீவு பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது 1942-இல் இருந்து 1945 வரை சப்பானியர் வசம் அந்தமான் தீவு வந்தது. இந்தக் காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசு இத்தீவில் இந்தியக் கொடியேற்றினார். அதன் நினைவாக 2018-ஆம் ஆண்டு திசம்பர் 30-ஆம் நாள் இதன் பெயர் ராஸ் தீவு என்பதில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோசு தீவு என்று மாற்றப்பட்டது.
தற்போது இது இந்தியக் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பொதுமக்கள் குடியேற அனுமதி இல்லை.
Remove ads
திரைப்படங்களில் ராஸ் தீவு
ராஸ் தீவில் பல திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு நடந்துள்ளது. சில திரைப்படங்கள் மற்றம் விவரங்கள்,
- காக்க காக்க திரைப்படத்தில் வரும் உயிரின் உயிரே பாடல் முழுவதும் இந்த தீவில்தான் படமாக்கப்பட்டது.
- கடல் திரைப்படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து
போர்ட் பிளேரிலிருந்து விசைப்படகுகள் இயக்கப்படுகின்றன.
படங்கள்
- ராஸ் தீவு
- ஆங்கிலேயர் காலத்து வெதுப்பகம்
- போர்ட் பிளேரின் நீர் விளையாட்டு வளாகத்தில் இருந்து ராஸ் தீவின் தோற்றம்
- 1872, ராஸ் தீவு சிறைத் தலைமை அலுவலகம்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads