ரேஞ்சர் 1
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரேஞ்சர் 1 (Ranger 1) என்பது அமெரிக்காவின் நாசாவால் ரேஞ்சர் திட்டத்தில் ஏவப்பட்ட விண்கலன்களில் ஒன்றாகும். இவ்விண்கலம் ஆகஸ்ட் 23, 1961 ஆம் ஆண்டு செலுத்தப்பட்டது. இந்த ஏவுதலின் முதன்மைக் குறிக்கோள் நிலவுப் பயணத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கருவிகளையும் நிலவுப் பயணம் தொடர்பான பிற தரவுகளையும் தெரிந்து கொள்வதாகும். மேலும், துணை குறிக்கோளாக விண்வெளியின் தன்மையை அறிவதும் அடங்கும். செலுத்துதலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாய் இவ்விண்கலம் பூமியின் தாழ் வட்டப்பாதையை விட்டு வெளியே செல்ல இயலவில்லை. எனவே இத்திட்டம் பகுதி அளவே வெற்றியடைந்த திட்டமாகும்.[1]
Remove ads
வடிவம்
விண்கலமானது அறுகோண வடிவத்தில் வடிவமைக்கப்பட்டது. இதில் 5.4 மீட்டர் நீலமுடைய இரண்டு சூரிய மின் தகடுகள் இருந்தன. விண்கலத்தின் கீழ்ப் பகுதியில் அதிதிறன் ஒலிவாங்கி/செலுத்தி (ஆண்டெனா) இணைக்கப்பட்டிருந்தது. இவ்விண்கலம் பூமியை 60,000 - 11,00,000 கிலோமீட்டர் நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்துமாறு செலுத்தத் திட்டமிடப்பட்டது.
தாமதம்
தொழில் நுட்பக் காரணங்களால் இவ்விண்கலத்தை செலுத்தும் நிகழ்வு ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை 26, 1961- ல் ஏவுவதாய் திட்டமிடப்பட்ட இத்திட்டம் கடைசியில் ஆகஸ்ட் 23, 1961- ல் ஏவப்பட்டது.
ஏவுதல்
ஆகஸ்ட் 23, 1961- ல் ஏவப்பட்ட போது இதன் முதல் நிலை சரியாக இயங்கியது. விண்கலத்தின் உயரத்தை அதிகரிக்க இயலாமல் போனதால் விண்கலம் செலுத்து வாகனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 30, 1961 அன்று பூமியை அடைந்தது. இதன் மூலம் மிகக் குறைந்த அளவு தகவல்களே பெறப்பட்டன.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads