ரைட்டர் (திரைப்படம்)

2021இல் வெளியான இந்தியத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

ரைட்டர் (திரைப்படம்)
Remove ads

ரைட்டர் (Writer ) என்பது 2021ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும்.[1] சமுத்திரக்கனி, திலீபன், இனியா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் . படம் 24 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது

விரைவான உண்மைகள் 'ரைட்டர்', இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

ஒரு அப்பாவி ஆராய்ச்சி மாணவர் சம்பந்தப்பட்ட ஒரு சட்டவிரோத காவலில் ஒரு காவல் நிலையத்தில் எழுத்தாளர் ஒருவர் சிக்கிக் கொள்கிறார். அவனது குற்ற உணர்வும், வருத்தமும் பெருகிய நிலையில், அவனால் அந்த இளைஞனைக் காப்பாற்ற முடிந்ததா? என்பதுதான் கதையாகும்.

நடிகர்கள்

ஒலிப்பதிவு

ஒலிப்பதிவையும், இசையையும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மேற்கொண்டார். மேலும் இசைத் தொகுப்பில் இரண்டு பாடல்கள் இடம்பெற்றன. இசை உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது.

வெளியீடு

படம் 24 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[2][3][4][5]

வரவேற்பு

விரைவான உண்மைகள் Professional reviews, Review scores ...

பர்ஸ்ட்போஸ்டின் ஆஷாமீரா ஐயப்பன் படதிதை 3.5/5 நட்சத்திரங்களுடன் மதிப்பிட்டார். "ரைட்டர் ஒரு நேர்மையான காவலரின் மனநலப் போராட்டத்தை வேறு எந்தப் படத்தையும் காட்டாத வகையில் சித்தரித்துள்ளார்- உள்நோக்கம் உண்மையானது மற்றும் நேர்மையானது" என்று குறிப்பிட்டார்.[6] பிஹைண்ட்வுட்ஸ் படத்தை 3/5 நட்சத்திரங்களுடன் மதிப்பிட்டது. "ரைட்டர் ஒரு திடமான அரசியல் படம். இது காவல் துறையின் பலவீனமான பக்கத்தைக் காட்டுகிறது" என்று கூறியது.[7] தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த லோகேஷ் பாலச்சந்திரன் 5க்கு 3 மதிப்பீட்டைக் கொடுத்து, "ரைட்டர் கண்டிப்பாக நேர்மையான நோக்கங்களைக் கொண்டவ. மேலும், அவர் கையாண்ட விஷயத்தைப் பார்க்கக்கூடியவர்" என்று எழுதினார்.[8][9] சினிமா எக்ஸ்பிரஸின் சுதிர் சீனிவாசன் 5 க்கு 3 மதிப்பீட்டை அளித்து, "படம் பல சுவாரஸ்யமான யோசனைகளைக் கொண்டுள்ளது. ஆனால் மிகவும் கசப்பான படம் அல்ல" என்று எழுதினார்.[10][11]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads