ரோசிணி நாடார்

இந்திய வணிக நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் From Wikipedia, the free encyclopedia

ரோசிணி நாடார்
Remove ads

ரோசிணி நாடார் மல்கோத்ரா (Roshni Nadar Malhotra) என்பவர் எச்.சி.எல் நிறுவனத்தின் [1] தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவர் எச் சி எல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவ நாடார்-கிரண் நாடார்[2] தம்பதியரின் ஒரே மகள் ஆவார்.[3] மேலும் இவர் இசைக்கலைஞராகவும், யோகா கற்றுக்கொண்டவராகவும் உள்ளார். ஹெச்சிஎல் நிறுவனத்தில் மிக பெரிய உத்திகளை வகுக்கும் பொறுப்பில் உள்ளார்.

விரைவான உண்மைகள் ரோசினி மல்கோத்ரா, தேசியம் ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

ரோசிணி நாடார் மல்கோத்ரா புது தில்லியில் வளர்ந்தார். அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் (Northwestern University) வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் சம்பந்தமாக இளங்கலைப் பட்டம் பெற்றார். கெல்லாக்ஸ் வணிகவியல் கல்லூரியில் (Kellogg School of Management)[4] நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

சிவ் நாடார் அறக்கட்டளை

ஸ்கை நியூஸ் (இங்கிலாந்து), சிஎன்என் (அமெரிக்கா) போன்ற நிறுவனங்களில் சில காலம் செய்தித் தயாரிப்பாளராக பணியாற்றினார். கொடையாளராகவும், அதிகாரம் மிக்க பெண் தொழிலதிபராகவும் பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிவ்நாடார் அறக்கட்டளையின் மூலம் சென்னையில் சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியை இலாப நோக்கம் இல்லாமல் நடத்திவருகிறார்.

ஹெச்சிஎல் பிராண்ட், ஷிவ் நாடார் அறக்கட்டளை, ஹெச்சிஎல் ஹெல்த்கேர் பிரிவு போன்ற நிறுவனங்களுக்கும் இவர் தலைமையேற்கிறார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்காக வித்யகியான் பள்ளி[5][6] திட்டத்தை நிறுவியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. சிவ் நாடார் பல்கலைக்கழகத்தையும் (Shiv Nadar University) நிர்வாகம் செய்கிறார்.

Remove ads

விருது

2014ம் ஆண்டிற்கான இளம் வள்ளல் பட்டத்தை என்டிடிவி வழங்கியுள்ளது.[7]

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads