லகாசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லகாசு (Lagash) சுமேரியம்[1] or [ŠIR.BUR].LAKI, "storehouse;"[2] அக்காதியம்அ: Nakamtu;[3]

பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தற்கால ஈராக் நாட்டின் திகார் மாகாணாத்தில் உள்ள டெல் அல் ஹிபா நகரத்தில், பண்டைய லகாஸ் நகரத்தின் தொல்லியல் களம் உள்ளது. பண்டைய லகாஸ் நகரம் புறாத்து ஆறு - டைகிரிஸ் ஆறு கலக்குமிடத்திலிருந்து வடமேற்கே, பண்டைய உரூக் நகரத்திற்கு கிழக்கே 22 கி.மீ. தொலைவில் உள்ளது. பண்டைய லகாஸ் நகரத்தின் தற்கால பெயர் அல் ஹிபா ஆகும். கிமு 2500 ஆண்டுகள் பழையான இந்நகரம் பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும். மேலும் இந்நகரம் லகாஸ் இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது.[4]
லகாஸ் நகர இராச்சியத்தை முதலாம் லகாஸ் வம்ச மன்னர்களும், இரண்டாம் லகாஸ் வம்ச மன்னர்கள் கிமு 2500 முதல் கிமு 2110 வரை ஆண்டனர்.
Remove ads
தொல்லியல்
லகாஸ் தொல்லியல் களம் 400 முதல் 600 ஹெக்டேர் (990 - 1,480 ஏக்கர்) பரப்பளவு கொண்டது. லகாஸ் தொல்லியல் களத்தை முதன் முதலில் 1887-இல் அகழ்வாய்வு செய்தவர் இராபர்ட் கோல்டுவே ஆவார்.[5] லகாஸ் தொல்லியல் களத்தை 1953-இல் மீண்டும் தொர்கில்டு மற்றும் ஜேக்கப்சன் ஆய்வு செய்தனர். இறுதியாக 1990-இல் லாகஸ் தொல்லியல் களத்தை 12 ஆண்டுகள் ஆய்வு செய்து ஒரு கோயிலை கண்டுபிடித்தனர்.[6]
லகாசு நகரத்தின் தொல்பொருட்கள்
- ஆப்பெழுத்துகளில் பொறிக்கப்பட்ட வெள்ளிப் பாத்திரம்
- லகாஸ் இராச்சிய மன்னர்
- கிமு 2350 காலத்திய ஆப்பெழுத்து குறிப்புகளுடன் கூடிய சாசனம்
- ஆப்பெழுத்து சாசனம், கிமு 2400
- சுமேரியக் கடவுள் மற்றும் லகாஸ் இராச்சிய மன்னர், கிமு 2430
Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads