லால் பகதூர் சாஸ்திரி மகளிர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

லால் பகதூர் சாஸ்திரி மகளிர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ( LBSITW ) என்பது, தென்மேற்கு இந்தியாவின் கேரள மாநிலத்தில் மலபார் கடற்கரையின் திருவனந்தபுரத்தில் உள்ள பெண்களுக்கான பிரத்தியேக முதல் பொறியியல் கல்லூரி ஆகும். கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தால் நிர்வகிக்கப்படும் இரண்டாவது பொறியியல் கல்லூரியான இது கேரள மாநிலத்தில் பெண்களுக்கான ஒரே அரசு பொறியியல் கல்லூரியாகும். லால் பகதூர் சாஸ்திரி பொறியியல் கல்லூரி,காசர்கோடு இம்மையத்தால் நிர்வகிக்கப்படும் இன்னொரு கல்லூரியாகும். கேரளாவின் முதலமைச்சரை ஆட்சிக் குழுவின் தலைவராகவும், அம்மாநில கல்வி அமைச்சரை துணைத் தலைவராகவும் கொண்ட கல்வி மேலாண்மைக் குழுவால் இக்கல்லூரி நிர்வகிக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கல்வி நிறுவனம் 30 அக்டோபர் 2001 அன்று தொடங்கப்பட்டது. ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இது கேரள அரசின் ஒரு நிறுவனமாகும். [1]

லால் பகதூர் சாஸ்திரி பொறியியல் கல்லூரி,காசர்கோடு கல்லூரியின் முதல் பகுதியில் மாணவரான பேராசிரியர் எம் அப்துல் ரஹிமான் தற்போது இந்த தொழிநுட்ப கல்வி நிறுவனத்தின் முதல்வராக பணியாற்றிவருகிறார். மேலும் இந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான லால் பகதூர் சாஸ்திரி மையத்தின் இயக்குனராகவும் பொறுப்பேற்றி பணிபுரிந்துவருகிறார்.

Remove ads

அமைவிடம்

திருவனந்தபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள பூஜாபுராவில் இக்கல்லூரி அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads