மலபார் கடற்கரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலபார் கடற்கரை (Malabar Coast) இந்தியத் துணைக்கண்டத்தின் தென் மேற்கில் மலபார் பிரதேசத்தில் அமைந்துள்ள நீண்ட மற்றும் குறுகிய கடற்கரைப் பிரதேசமாகும். [1] புவியியல்படி மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்குசரிவுகளில் நீர்மிகு பருவப் பெயர்ச்சிக் காற்று மேகங்கள் தடுக்கப்பட்டு தென்னிந்தியாவின் மிகுந்த மழைபெறும் பகுதிகளாக விளங்குகிறது. ”மலபார் கடலோரம்” என்ற சொல் சிலநேரங்களில் கொங்கண் கடலோரத்திலிருந்து கன்னியாகுமரி வரையுள்ள மேற்குக் கடலோரக் கரைப்பகுதிக்கு பயன்படுத்தப்படுகிறது. மலபார் கடற்கரையில் அமைந்த பெரிய துறைமுகங்களில் ஒன்று கொச்சி துறைமுகம் ஆகும்.

Remove ads
வரலாறு
மலபார் கடலோரப் பகுதிகள் கி.மு 3000 முதலே முதன்மை வணிக மையமாக இருந்துள்ளது. மெசபடோமியா, எகிப்து, கிரேக்கம், உரோமை, யெருசேலம், அரபு நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டுள்ளது. மிகப் பழமையான இன்றளவும் செயலாக்கத்தில் உள்ள துறைமுக நகரங்கள், கோழிக்கோடு கண்ணூர் போன்றவை பல நூற்றாண்டுகளாக இந்தியப் பெருங்கடல் வழியே வணிகம் நடத்தி வந்துள்ளது.
இங்குள்ள நகரங்கள் எப்போதுமே கடல் மற்றும் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்டிருந்தமையால் இவை மிகவும் பன்பண்பாட்டுத் தன்மையுடையனவாக உள்ளன. மலபார் கடற்கரை பகுதிகள் முதன்முதலாக பிற சமயத்தினரான சிரியா கிறித்தவர்கள், கொச்சி யூதர்கள், அரபு இசுலாமியரை ஏற்றுக்கொண்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
