லிபேட்டி பிளாசா, கொழும்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லிபேட்டி பிளாசா பல்கடை அங்காடி (Liberty Plaza Shopping Complex) என்பது லிபேட்டி பிளாசா என்றும் பிரபலமாக அறியப்படும் இலங்கையின் வணிக வளாகம் ஆகும், இது மேற்கு மாகாணம், கொள்ளுப்பிட்டி, கொழும்பில் அமைந்துள்ளது.[2] இது உள்ளூர் மற்றும் சர்வதேச வாணிகப்பொறிப்புகளை விற்பனை செய்கிறது. இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது வணிக வளாகம் இதுவாகும்.[3] இது 1980 களின் முற்பகுதியில் கட்டப்பட்டதும், இலங்கையின் பழமையானதும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வணிக வளாகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[4] 1980 களில் தளத்தின் கட்டுமானத்திற்கான சித்ரா வெட்டிக்கார தர நில அளவையராக பணியாற்றினார்.
இந்த வணிக வளாகம் ஆடைகள், பொம்மைகள், மது, உணவு, அணிகலன்கள், நகைகள் போன்ற பல்வேறு பொருட்களை விற்பனை செய்கிறது. இது கையடக்கத் தொலைபேசிக் கடைகளுக்கு பிரபலமானதும் கையடக்கத் தொலைபேசி வணிகத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.[5] லிபேட்டி பிளாசா 1985 இல் பிரபலமான தேயிலை வணிக முத்திரை யான மெல்ஸ்னாவின் முதல் விற்பனை நிலையத்தையும் திறந்தது. இந்த வணிக வளாகம் ஞாயிற்றுக்கிழமை தவிர தினமும் திறக்கப்படும். [6][7]
Remove ads
மேலும் பார்க்கவும்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads