லூக்கா (நற்செய்தியாளர்)

நான்கு நற்செய்தியாளர்களில் ஒருவர் From Wikipedia, the free encyclopedia

லூக்கா (நற்செய்தியாளர்)
Remove ads

நற்செய்தியாளரான புனித லூக்கா (பண்டைக் கிரேக்கம்: Λουκᾶς, Loukás) ஒரு ஆதி கிறித்தவ எழுத்தாளரும், திருச்சபை தந்தையரும், புனித ஜெரோம் மற்றும் யோசிபஸின் படி விவிலியத்தின் லூக்கா நற்செய்தி மற்றும் அப்போஸ்தலர் பணி என்னும் நூல்களின் ஆசிரியரும் ஆவார். இவர் நான்கு நற்செய்தியாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவரின் எழுத்து நடை, இவர் நன்கு கற்றறிந்தவர் என்பதனை எடுத்தியம்புகின்றது.

விரைவான உண்மைகள் நற்செய்தியாளரான புனித லூக்கா, திருத்தூதர், நற்செய்தியாளர், இரத்தசாட்சி ...

இவர் அந்தியோக்கியா நகரில் வாழ்ந்த மருத்துவர் ஆவார்.[2][3][4][5][6][7] இவரைப்பற்றிய மிகப்பழைய குறிப்பு திருத்தூதர் பவுல் எழுதிய பிலமோன் வசனம் 24, கொலோசையர் 4:14 மற்றும் திமொத்தேயு 4:11இல் காணக்கிடைக்கின்றது.

இவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் அல்ல. மாறாக அவரின் 70 சீடருள் ஒருவராக இருக்கலாம் எனவும், குறிப்பாக உயிர்த்த இயேசுவோடு எமாவுசுக்கு சென்ற இரு சீடர்களுள் ஒருவராக இருக்கலாம் எனவும் விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர்.

இவர் தனது 84ஆம் அகவையில் மரித்தார் என்பர்[8]. இவரின் மீ பொருட்கள் கான்ஸ்டண்டினோப்பிளுக்கு கி.பி 357இல் கொண்டுவரப்பட்டன. இவரின் விழாநாள் 18 அக்டோபர் ஆகும்.

Remove ads

ஆதாரங்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads