ழகரம் (திரைப்படம்)
2019 ஆண்டைய தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ழகரம் (zhagaram) என்பது 2019 ஆம் ஆண்டய தமிழ் திரைப்படமாகும். இப்படமானது கவா கம்ஸ் எழுதின ப்ராஜக்ட் ஃ என்ற புதினத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படத்தை திரைக்கதை அமைத்து அறிமுக இயக்குநரான க்ரிஷ் இயக்கியுள்ளார். படத்திற்கான இசையை தரண் குமார் அமைக்க, படத்தை ‘பால் டிப்போ’ கதிரேசன் தயாரித்துள்ளார்.[1]
Remove ads
தயாரிப்பு
படத்தின் முதன்மைக் காட்சிகளானது விசாகப்பட்டினத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரியிலும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் புதையலை எடுக்கச் செல்லும் குழுவானது ஒரு பழமையான சுரங்கம் வழியே செல்வதாக வரும் காட்சிக்கு, பல்லவ மன்னர் காலத்தில் கட்டப்பட்ட திருவிடந்தையில் உள்ள சுரங்கத்தைப் போன்ற ஒரு செட் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் சுவரொட்டியை இயக்குநர் விஜய் மில்டன் வெளியாட்டார்.[2]
Remove ads
கதைச்சுருக்கம்
படத்தின் கதைக்களமானது புதையலைத் தேடுவதாக உள்ளது. சிறுசிறு குறிப்புகளைக் கொண்டு புதையலைத் தேடிப் போகிறது ஒரு குழு அவர்கள் புதயலை கண்டடைகிறார்களா இல்லையா என்பதே கதை.
நடிகர்கள்
- அகிலாக நந்தா
- சினேகவாக ஈடன் கொரியகோஸ்
- சூரியாவாக விஷ்ணுபரத்
- சந்திரமோகன்
- கோதண்டன்
- மீனேஷ் கிருஷ்ணா
இசை
இப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். படத்தில் ஒரு பாடல் உள்ளது அதை கபிலன் எழுத ஹரிசரண், சுவேதா மேனனும் பாடியுள்ளனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads