நந்தா (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நந்தா (Nandha Durairaj) என்று பரவலாக அறியப்படும் நந்தா துரைராஜ் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார். சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.[1] சங்கரின் தயாரிப்பில் வெளியான ஈரம் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார்.[2] இவர் தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
இவர், கோவையில்[3] துரைராஜ் - ராணி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு கார்த்திக் என்ற இளைய சகோதரர் உள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மு. கண்ணப்பனின் பேரன் ஆவார்.[4]
திரைப்பட விபரம்
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
2002 | மௌனம் பேசியதே | கண்ணன் | |
2003 | புன்னகை பூவே | வெங்கட் | |
2005 | கோடம்பாக்கம் | சுகவண்ணன் | |
செல்வம் | செல்வம் /கண்ணன் | ||
அகரம் | திரு | ||
2006 | ஆணிவேர் | மருத்துவர் நந்தா | |
2007 | உற்சாகம் | கணேசன் | |
2009 | ஈரம் | பாலகிருஷ்ணன் | பரிந்துரை - விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) |
2010 | ஆனந்தபுரத்து வீடு | பாலா | |
2011 | வந்தான் வென்றான் | ரமணா | |
வேலூர் மாவட்டம் | முத்துக்குமார் | ||
2014 | அதிதி | மதியழகன் | [5] |
2015 | கதம் கதம் | நந்தா | |
புதிய திருப்பங்கள் | ஆதித்யா | முன் தயாரிப்பு | |
வில்லங்கம் | படப்பிடிப்பில் [6] | ||
அதிபர் | டேவிட் | படப்பிடிப்பில் |
பின்னணி குரல் கொடுத்தவை
ஆண்டு | திரைப்படம் | நடிகர் | குறிப்புகள் |
2014 | ஜே சி டேனியல் | பிரித்விராஜ் | செல்லுலாய்டு மலையாளத் திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத்தில் |
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads