வங்காளதேசக் குடியரசுத் தலைவர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வங்காளதேசக் குடியரசுத் தலைவர் வங்காளதேசத்தின் நாட்டுத் தலைவர் ஆவார். இவரை வங்காள மொழியில் ராஷ்டிரபதி என்று குறிப்பிடுவர். குடியரசுத் தலைவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வர். எனவே, குடியரசுத் தலைவரானவர் பெரும்பான்மை பெற்ற கட்சியின் பிரதிநிதியாகவே இருப்பார்.[1] வங்காளதேசத்தில் அதிகாரம் பெற்றவர் பிரதமரே. குடியரசுத் தலைவர் பதவி அலங்காரப் பதவியாகவே இருக்கும். இவருக்கு அதிக அதிகாரங்கள் இல்லை.[2]
300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது வாக்கெடுப்பு முறையில் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வர்.[3][4] ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பார். பதவிக் காலம் முடிந்தாலும், அடுத்த குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பதவியில் நீடிப்பார்.[1]
Remove ads
பணிகளும் அதிகாரங்களும்
குடியரசுத் தலைவரானவர் பிரதமரின் ஆலோசனைப்படியும், அவருடைய அமைச்சரவையின் ஆலோசனையின்பேரிலும் செயல்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் தெரிவிக்கிறது.[1]
பணி நியமனம்
கீழ்க்காணும் பதவிகளில் ஒருவரை நியமிப்பதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு.[1]
- கட்டுரை எண் 56 (2) என்பதில் கூறப்பட்டுள்ளபடி, பிரதமரையும், பிற அமைச்சர்களையும் நியமிக்கலாம். பிரதமரானவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவராகவும் இருக்க வேண்டும். பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அமைச்சரை பதவி நீக்கம் செய்யலாம்.
- கட்டுரை எண் 95 என்பதில் கூறப்பட்டுள்ளபடி, உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதியையும், ஏனைய நீதிபதிகளையும் நியமிக்கலாம்.
- கட்டுரை எண் 118 என்பதில் கூறப்பட்டுள்ளபடி, வங்காளதேசத் தேர்தல் ஆணையத்தையும், அதன் தலைவரையும் நியமிக்கலாம்.
தற்காப்பு
தன்னுடைய அனைத்து செயல்பாடுகளுக்கும் தற்காத்துக் கொள்ள குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை அரசமைப்புச் சட்டத்தின் 51ஆம் கட்டுரை தெரிவிக்கிறது. இவர் யாருக்கும் தன் செயல்பாடுகளுக்கான விளக்கத்தை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இவரது செயல்பாடுகளுக்கு எதிராக யாரும் குற்றம் சுமத்த முடியாது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் வாக்களித்து, குடியரசுத் தலைவரை பதவியைவிட்டு நீக்கலாம்.
கருணை மனுக்கள் ஏற்பு
வங்காளதேசத்தில் உள்ள எந்த ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி, தண்டனை வழங்கப்பட்ட ஒருவரின் கருணை மனுவை ஏற்று, அவரது தண்டனையை ரத்து செய்யலாம். இந்த அதிகாரத்தைப் பற்றி அரசமைப்புச் சட்டத்தின் 49வது கட்டுரை தெரிவிக்கிறது.[1]
சட்டமுன்வரைவு
அரசமைப்புச் சட்டத்தின் 80வது கட்டுரையில் உள்ளபடி, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து, அதை மீள்பார்வையிடுமாறு திருப்பி அனுப்பலாம். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளித்த பின்னரே, சட்டமுன்வரை சட்டமாக்கப்படும்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்
தனியார் பல்கலைக்கழகங்களின் சட்டம் 1992 என்ற சட்டத்தின்படி, வங்காளதேசத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் குடியரசுத் தலைவரே வேந்தர் ஆவார்.[5] குடியரசுத் தலைவரை அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக கருத எந்த சட்டமும் இயற்றப்படவில்லை.[6] இருந்தபோதும், பதவியில் உள்ள குடியரசுத் தலைவரை அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தராகக் கருதும் பழக்கம் உள்ளது.
Remove ads
தேர்வு
தகுதி
குடியரசுத் தலைவர் ஆவதற்கு தேவையான தகுதிகள் வங்காளதேச அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளன.[7]
- 35 வயதோ, அதற்கும் குறைவான வயதோ உடையவராகவும்,
- வங்காளதேசப் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படாமலும்,
- ஏற்கனவே குற்றச்சாட்டின்பேரில் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படாலும்,
இருந்தால் அவர் வங்காளதேசக் குடியரசுத் தலைவராகத் தகுதியானவர்.
கட்டுப்பாடுகள்
அரசமைப்புச் சட்டத்தின் 27வது கட்டுரையில், எந்த ஒரு குடிமகனையும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தடை செய்வதைப் பற்றி குறிப்பிடுகிறது. கீழ்க்காணும் கட்டுப்பாடுகள் பொருந்தியிருந்தால் அந்த குடிமகன் குடியரசுத் தலைவர் ஆக முடியாது.
- குறைந்தது இரு முறையாவது குடியரசுத் தலைவராக பதவியில் இருந்தவர்.
- நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்.
ஒரு வேளை, நாடாளுமன்ற உறுப்பினர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய பின்னரே குடியரசுத் தலைவராகப் பதவியேற்க முடியும்.
தேர்வுமுறை
குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் முடிந்தால், புது குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்வர். பாராளும்னற உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் நினைத்தால் குடியரசுத் தலைவரை பதவிநீக்கம் செய்யலாம்.
உறுதிமொழி
வங்காளதேச முதன்மை நீதிபதியின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் உறுதிமொழி ஏற்க வேண்டும். முதன்மை நீதிபதி இல்லாத பட்சத்தில் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியின் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கலாம். அரசமைப்புச் சட்டத்தின்படி நடந்து, அதை பாதுகாப்பதாக உறுதி ஏற்க வேண்டும்.[8]
Remove ads
ஆட்சி செய்ய முடியாத நிலை
அரசமைப்புச் சட்டத்தின் 54வது கட்டுரையில் குடியரசுத் தலைவருக்கு மாற்றாக தற்காலிகமாக யார் பதவியில் இருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் குடியரசுத் தலைவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ, மற்ற காரணங்களினாலோ, நாடாளுமன்ற சபாநாயகர் குடியரசுத் தலைவராக செயல்படுவார். குடியரசுத் தலைவர் மீண்டு வந்ததும், பதவியை தொடரலாம்.[1]
பதவிநீக்கமும் பதவிவிலகலும்
கைப்பட எழுதிய பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகரிடம் கொடுப்பதன் மூலம், குடியரசு தலைவர் தன் பதவியில் இருந்து விலகலாம். நாடாளுமன்றத்தினாலும் குடியரசுத் தலைவரின் பதவி பறிக்கப்படலாம். குடியரசுத் தலைவரின் மீது குற்றம் சுமத்தி, அதை விசாரிக்க வேண்டும். தன்னை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை உண்டு. குடியரசுத் தலைவரின் பதவி நீக்கப்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இருவர் ஆதரவாக வாக்காளித்தால் பதவி பறிக்கப்படும்.[1]
Remove ads
குடியிருப்பும் அலுவலகமும்
டாக்காவில் உள்ள பங்கபவனில் குடியரசுத் தலைவருக்கான வீடு இருக்கும். நாட்டோர் மாவட்டத்தில் உத்தர கனோ பவன் என்னும் இடத்திலும் குடியரசுத் தலைவருக்கான மாளிகை இருக்கும்.
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads