வசந்த வாசல்
1996 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வசந்த வாசல் (Vasantha Vaasal) என்பது 1996 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி காதல் திரைப்படம் ஆகும். எம். ஆர் இயக்கிய இந்த படத்தில் விஜய், சுவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்,[1] மன்சூர் அலி கான், வடிவேலு, கோவை சரளா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இசை அமைப்பாளர் மாசாவின் அறிமுக படம் இது. இந்த படம் முதலில் 1995 இல் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் பின்னர் மார்ச் 1996 இல் தாமதமாக வெளியானது. இந்த படம் இந்தி மொழியில் சிர்ஃப் டும் ஹாய் டம் என மொழிமாற்றம் செய்யப்பட்டது.[2]
Remove ads
கதை
விஜய் ( விஜய் ) சினிமா மீது வெறித்தனமாக இருப்பதால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் நகரத்திற்கு வருகிறார். அவர் திவ்யாவின் ( சுவாதி ) வீட்டில் வாடகைக்கு இருக்கிறார். அவர் திரைப்படக் காட்சிகளை நடித்து பார்கிறார், திரைப்பட உரையாடல்களை உரத்த குரலில் பேசிப் பார்க்கிறார், இதனால் திவ்யாவின் படிப்புக்குத் தொந்தரவாக ஆகிறது. இதனால், இருவரும் இசையில் மோதல் உருவாகிறது. ஆனால் இறுதியாக அவர்கள் ஒருவரையோருவர் காதலிக்கத் துவங்குகிறார்கள். கணேஷ் ( மன்சூர் அலிகான் ) திவ்யாவின் முறைமாமன், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். இதனால் கணேஷ் காதலர்களை தொந்தரவு செய்யத் தொடங்குகிறார், ஆனால் விஜய் திவ்யாவுக்காக போராடி கடைசியில் அவள் கையைப் பிடிக்கிறார்.
Remove ads
நடிகர்கள்
- விஜய் - விஜய்
- சுவாதி - திவ்யா
- மன்சூர் அலி கான் - கணேஷ்
- வடிவேலு - வேலு
- கோவை சரளா - வேலுவின் மனைவி
- சி. ஆர். சரஸ்வதி - வசந்தா (திவ்வாவின் தாய்)
- இடிச்சப்புளி செல்வராசு - ஒப்பனைக் கலைஞர்
- சகீலா - சுனிதா
- குள்ளமணி
- வெள்ளை சுப்பையா
- அ. சகுந்தலா - வேலுவின் மாமியார்
- ஜீவா - இராணி
- பயில்வான் ரங்கநாதன்
- சாப்ளின் பாலு - விஜயின் நண்பர்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு மாசா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை மாசா, உமா கண்ணதாசன், எம். ஆர் ஆகியோர் எழுதியுள்ளனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads