வஞ்சி அரவம்
தமிழ் இலக்கணத்தில் வஞ்சி அரவம் அல்லது அரவம் என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணை From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ் இலக்கணத்தில் வஞ்சி அரவம் அல்லது அரவம் என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். இங்கே அரவம் என்பது ஒலி என்னும் பொருள் கொண்டது. படையெடுத்துச் செல்லும்போது நால்வகைப் படைகளும் எழுப்பும் ஒலி பற்றிக் கூறுவதால் இத்துறைக்கு இப் பெயர் ஏற்பட்டது.
போர் முரசின் முழக்கம், போர் வீரர்களின் ஆர்ப்பரிப்பு, யானைப் படையில் இருந்து எழும் இடி போன்ற பிளிறல் ஒலி என்பவை இத்துறை சார்ந்த பாடல்களின் கருப் பொருளாக அமைகின்றன. இதனை விளக்க, வலிமையுடைய வார் கொண்டு கட்டப்பட்ட வீர முரசோடு போர் யானைகள் சேர்ந்து முழங்க அழகிய வாளினையுடைய சேனை சினங்கொண்டு எழுந்தது[1] என்னும் பொருள்படும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.
- வள்வார் முரசமொடு வயக்களிறு முழங்க"
- ஒள்வாள் தானை உருத்து எழுந்தன்று
Remove ads
எடுத்துக்காட்டு
- பௌவம் பணைமுழங்கப் பற்றார்மண் பாழாக
- வௌவிய வஞ்சி வலம்புனையச் - செவ்வேல்
- ஒளிரும் படைநடுவண் ஊழித்தீ யன்ன
- களிறும் களித்ததிரும் கார்
- - புறப்பொருள் வெண்பாமாலை 36.
குறிப்பு
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads