வண்டித்தாவளம்

கேரள சிற்றூர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வண்டித்தாவளம் (Vandithavalam) என்பது இந்தியாவின், கேரளாத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். இது பெருமாட்டி கீராம ஊராட்சிக்கு உட்பட்ட ஊர்களில் ஒன்றாகும்.[1]

விரைவான உண்மைகள் வண்டித்தாவளம், நாடு ...

வண்டித்தாவளம் முந்தைய கொச்சின் இராச்சியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். ஆனால் கேரள மாநில உருவாக்கப்பட்டப் பிறகு பாலக்காடு மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது.

வண்டித்தாவளம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வண்டித்தாவளம் ஊரானது பாரதபுழா ஆற்றினால் வளம் பெற்ற வேளாண் நிலங்களைக் கொண்டுள்ளது.

வண்டித்தாவலம் பாலக்காட்டுக் கணவாயில் அமைந்துள்ளது. இதனால் வரலாற்று ரீதியாக அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் நாடுகளிலிருந்து போக்குவரத்து தொடர்பில் உள்ளது. வண்டித்தாவளம் பயணிகள் ஓய்வெடுக்கும் இடமாக விளங்கியது, இதனால் இது வண்டித்தாவளம் என்ற பெயர் பெற்றது. இது வண்டி + தாவளம் ஆகிய சொற்களின் சேர்க்கையாகும் தாவளம் என்பது மலையாளத்திலும், தமிழிலும் தங்குமிடம்[2] என்பது பொருளாகும்.

வண்டித்தாவளம் பாலக்காட்டிலிருந்து 17 கி. மீ தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 30 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

Remove ads

மக்கள்தொகை

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வண்டித்தாவளத்தின் மக்கள் தொகை 12,160 ஆகும். அதில் ஆண்கள் 6,006 பேரும், பெண்கள் 6,154 பேரும் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads