வத்திராயிருப்பு

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சி. From Wikipedia, the free encyclopedia

Remove ads

வத்திராயிருப்பு (Vathirairuppu) அல்லது வத்ராப் (Watrap), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் இருக்கும் தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். மேலும் இது 18 பிப்ரவரி, 2019 அன்று புதிதாக துவக்கப்பட்ட வத்திராயிருப்பு வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.

விரைவான உண்மைகள் வத்திராயிருப்பு வத்ராப், Country ...

வத்திராயிருப்பு, மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில், மதுரையிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், விருதுநகரிலிருந்து 38 கி.மீ. தொலைவிலும், கிருஷ்ணன் கோயிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மேலும் வத்திராயிருப்பிலிருந்து, சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை10 கி.மீ. தொலைவில் உள்ளது.

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,634 வீடுகளும், 16,784 மக்கள்தொகையும் கொண்டது.[2] இது 13 ச.கி.மீ.. பரப்பும், 18 வார்டுகளும், 36 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

Remove ads

பெயர்க்காரணம்

ஸ்ரீமகாலட்சுமி தாயார் இத்தலத்தில்தான் தவம் செய்தார். எனவே ஸ்ரீ (திருமகள்) "வக்த்ரம்' (திருமுகம்) என்பது "ஸ்ரீவக்த்ரபுரம்' என்று அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது வத்திராயிருப்பு என்று அழைக்கப்படுகிறது.[4]

கோவில்கள்

வத்திராயிருப்பில் அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் மற்றும் நல்லதங்காள் கோயில் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன. பல ஆண்டுகள் பழமையான காசிவிசுவநாதர - விசாலாட்சி அம்மன் கோவிலும், சேதுநாரயணப் பெருமாள் கோவிலும் உள்ளது. மேலும் ஊர் தேவதையான முத்தாலம்மனுக்கும் ஊரின் நடுவில் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா புரட்டாசி மாதம் ஏழு நாள்கள் நடைபெறும் மற்றும் தேரோட்டமும் நடத்தப்படுகிறது. இது அனைத்து மக்களாளும் கொண்டாடப்படும் சமத்துவப் பொங்கலாகும்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads