வராக புராணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வராக புராணம் (Varaha Purana) என்பது மகாபுராணங்களில் பன்னிரண்டாவது புராணமாகும். இது திருமாலின் அவதாரத்தினை விளக்கும் புராணம்.[1] இப்புராணம் 24,000 ஸ்லோகங்களை கொண்டதும், திருமாலின் பெருமைகளை எடுத்துரைக்கும் சாத்துவிக புராண வகையைச் சார்ந்ததும் ஆகும்.
பாதாளத்திற்கு சென்ற பூமாதேவியை மீட்க திருமால் வராக அவதாரம் எடுத்தார். அவ்வாறு மீட்கபட்ட பின்பு பூமாதேவியின் கேள்விகளுக்கு வராக அவதாரக் கோலத்திலேயே திருமால் அளித்த பதில்களின் தொகுப்பே இந்நூலாகும். வராக அவதாரத்தில் காசியப முனிவருக்கும், அவருடைய மனைவியான திதி்க்கும் பிறந்த இரணியாகசனை திருமால் அழித்தார்.[1]
இப்புராணத்தில் திதிகள், விரதங்கள், தீர்த்தங்கள், பாவங்கள், பாவங்களுக்கான பரிகாரங்கள் ஆகியவையும் கூறப்பெற்றுள்ளன.
Remove ads
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads