வரி ஆமணக்குச் சிறகன்
பூச்சி இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வரி ஆமணக்குச்சிறகன் (Angled castor – Ariadne ariadne) வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர அளவுள்ள வண்ணத்துப்பூச்சி ஆகும். இவை இந்தியா, இலங்கை, மியான்மார், சீனா, பர்மா மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
Remove ads
தோற்றம்
இவை 4.5 செமீ முதல் 6 செமீ வரை சிறகளவு கொண்டிருக்கும்.[1]
ஆண் மற்றும் பெண் பூச்சிகள் ஒரே போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும். ஆண் பூச்சிகளை காட்டிலும் பெண் பூச்சிகளின் நிறம் சற்று மங்கி காணப்படும். சிறகின் மேற்புறம் ஆரஞ்சு கலந்த பழுப்பு நிறத்துடன் மங்கிய கருநிறத்தில் சீரான அலை வடிவிலான கோடுகளை கொண்டிருக்கும். முன்புற மற்றும் பின்புற சிறகுகளின் வெளி விளிம்பு பகுதியானது அலை வடிவில் அமைந்திருக்கும். முன்சிறகின் உச்சி பகுதிக்கு சற்று கீழே ஒரு வெண்ணிற புள்ளி இருக்கும்.[2] முன்புற சிறகின் வெளிவிளிம்பு பகுதியில் சீராக அமையாத பள்ளம் போன்ற பகுதி நரம்பு 3 மற்றும் 5 க்கு இடையில் அமைந்திருக்கும்.[3]
சிறகின் கீழ்புறம் கரும்பழுப்பு நிறத்தில் காணப்படும். அதில் ஊதா கலந்த பழுப்பு நிற பட்டைகளை கொண்டிருக்கும். பருவத்திற்கு தகுந்து சிறகில் காணப்படும் அடையாள குறிப்புகள் சற்று வேறுபடும்.
Remove ads
வாழிடம்
இவை புதர்காடுகள் மற்றும் உயரம் குறைந்த நில பகுதிகளை வாழிடமாக கொண்டுள்ளன.இவற்றின் புழு பருவத்தில் ஆமணக்கு தாவரத்தை உணவாக கொள்வதால், ஆமணக்கு தாவரம் அதிகம் உள்ள இடங்களில் இவற்றை எளிதாக காண முடியும். சாலையோரங்களில் சில நேரங்களில் இவற்றை காணலாம்.
நடத்தை
மெதுவாக சிறகடித்து பறப்பவை, சில சமயங்களில் காற்றில் மிதந்த படியும் செல்லும். வருடம் முழுவதும் காணப்படும். ஆண் பூச்சிகள் அவற்றின் வாழிட எல்லையினை பாதுகாக்கும்.
படங்கள்
- புழு
- கூட்டுப்புழு
- வண்ணத்துப்பூச்சி நிலை
- புணர்ந்த நிலையில்
குறிப்புகளும் மேற்கோள்களும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads