வாணாதிராயர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாணாதிராயர்கள் என்போர் பாண்டிய சாம்ராஜ்ஜியத்தில், குறு நில மன்னர்களாகவும், படைத்தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின், விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்களுக்கு கீழும் அதிகாரத்துடன் ஆட்சி செய்தனர். மதுரை அழகர் கோவில் பகுதியில் தனி அரசாட்சி நடத்தி வந்த இவர்கள் வைணவ சமயத்தை பின்பற்றினார்கள்.[1]
மதுரை சுல்தானிய படையெழுச்சியின் காரணமாக பாண்டியருக்கு அடங்கிய சிற்றரசராக ஆட்சிபுரிந்த வாணாதிராயர், பாண்டியரை வென்று கைப்பற்றி பாண்டிய நாட்டினை ஆட்புரியலாயினார். பின்பு மதுரையினையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டனர். பாண்டியர்களைச் ஸ்ரீவில்லிபுத்தூதூருக்குத் தெற்கே விரட்டினர்.[2] அழகர் கோவில் வெளிக் கோட்டை கி.பி. 14 - ஆம் நூற்றாண்டில் வாணாதிராயர் வழியினரால் கட்டப்பட்டது . இன்று இக்கோட்டை அழிவுற்ற நிலையில் காணப்படுகிறது.[3]
இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கிடைத்துள்ளன. வாணதிராயர் குலத்தைச் சேர்ந்த மன்னர் சுந்தரதோள் மகாவலி வாணதிராயர், கி.பி.15-ம் நூற்றாண்டில், அனகுறிச்சியில் பிராமணர்களுக்கு தானமாக சதுர்வேதிமங்கலம் அமைத்துக் கொடுத்துள்ளதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.[4]
தமிழ்நாட்டில் மழவர், முத்தரையர், முனையதரையர், இருக்குவேள், வாணாதிராயர் , காலிங்கராயர் பல்வேறு பெயர்களைக் கொண்ட ஆற்றல்மிக்க குழுக்கள் குறுநில மன்னர்களாக சிறந்து விளங்கினார். அதில் வாணாதிராயர்கள் மாபலிச் சக்கரவர்த்தியின் வழியில் வந்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்ட இவர்கள் மாவலி வாணாதிராயர் என்று தம்மை பெயரிட்டு அழைத்துக் கொண்டார்கள். கல்வெட்டுக்களில் இவர்களே வாணர் என்றும், பாணர் என்றும் மாறி மாறி அழைக்கப்பட்டிருக்கின்றனர்.[5]
10, 11-வது நூற்றாண்டுகளில் வெள்ளாற்றின் வடக்கிலுள்ள கில பாகங்களை “அரையர்" எனப்பட்ட சில தலைவர்கள் கைப்பற்றிக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தனர். கருக்காக்குறிச்சிராயர், வாணாதிராயர் (வாணாதிராயன் கோட்டை), கடம்பராயர் (புல்வயல் அரசர்), ஆலங்குடி நாட்டு இரண்டு வகை அரையர்கள், அம்புகோயில் ஐந்து வீட்டரையர், இரும்பாலியரையராகிய கடாரத்தரையர், குலோத்துங்க சோழதரையர் (குன்றையூர் அரசர்) எனப்பல பிரிவுகள் இருந்தன. புதுக்கோட்டை வாணாதிராயர்க்கும் கார்காத்த வெள்ளாளர்க்கும் நடந்த சண்டையில் வீசங்கிநாட்டுக் கள்ளர்கள், வெள்ளாளர்களைச் சுரக்குடிவரையில் விரட்டிவிட்டு, எழு பிரபுக்களைச் சிறைப்பிடித்து வாணாதிராயர் முன் கொண்டுவந்து விட்டனர். [6]
மாவலியார், வாணாதிராயர் என்னும் பட்டமுடையவர்கள் கள்ளர் மரபில் உள்ளனர்.[7][8][9]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads