வாதவியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாதவியல் (Rheumatology) என்பது வாத நோய்களுக்கான சிகிச்சை, நோயறிதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பொது மற்றும் குழந்தை மருத்துவத்தின் சிறப்பு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். இப்பிரிவில் நிபுணரான மருத்துவரை வாதவியலாளர் (Rheumatologist) அல்லது முடவியலாளர் எனலாம். மூட்டுகள், மென்திசுக்களை உள்ளடக்கிய தன்னுடல் தாக்குநோய்கள், நாள அழற்சி, பரம்பரையாக வரும் இணைப்பிழைய பிறழ்வுகள் ஆகிய மருத்துவ இடர்ப்பாடுகளுக்கு மருத்துவம் செய்பவர்கள் வாதவியலாளர்கள் ஆவர்.
தற்பொழுது, இவ்விதமான பிணிகள் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் பிறழ்வினைகளாகக் கருதப்படுகின்றன. எனவே, வாதவியல் என்பது அதிகளவு நோயெதிர்ப்பியல் துறையைச் சார்ந்தது எனலாம். தற்கால வாதவியலில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றமாகக் கடும் வாதநோயைக் கட்டுப்படுத்தும் உயிரிய மருந்துகளைக் (biologics) கண்டறிந்ததைக் குறிப்பிடலாம்[1].
Remove ads
பிணிகள்
வாதவியலாளரால் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் வாத நோய்கள்:
சிதைகின்ற மூட்டு நோய்கள்
அழற்சியாக்கும் மூட்டு நோய்கள்
- முடக்கு வாதம்
- தண்டுவட எலும்பு மூட்டு நோய்
- மடங்காதநிலை முதுகெலும்பு வீக்கம்
- நோயெதிர்ப்பிய முடக்கு வாதம் (Reactive arthritis)
- சிரங்கு முடக்கு வாதம்
- குடல் நோய் சார்ந்த முதுகெலும்பு அழற்சி (Enteropathic spondylitis)
- இளம்பருவ மூலமறியா முடக்கு வாதம் (Juvenile Idiopathic Arthritis)
- படிக மூட்டு நோய்கள்: கீல்வாதம், போலியான கீல்வாதம்
- நோய்த்தொற்று முடக்கு வாதம் (Septic arthritis)
உள்பரவிய நிலைகள், இணைப்பிழைய பிறழ்வுகள்
- மண்டலிய செம்முருடு
- ஷியோக்கிரன் நோய்க்கூட்டறிகுறி (Sjögren's syndrome)
- தோல் தடிப்பு (Scleroderma)
- பலதசையழற்சி (Polymyositis)
- சரும தசையழல் (Dermatomyositis)
- பலதசைவலி மூட்டு நோய் (Polymyalgia rheumatica)
- தனித்தன்மையற்ற இணைப்பிழைய பிறழ்வுகள் (Mixed connective tissue disease)
- பலகுருத்தெலும்பழற்சி (Polychondritis)
- இணைப்புத்திசுப் புற்று (Sarcoidosis)
- நாள அழற்சி
- ஊனீர் சுகவீனம் (Serum sickness)
- டக்கயாசு தமனியழற்சி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads