வாத்வான் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாத்வான் இராச்சியம் (Wadhwan state), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவில் இருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் சுரேந்திரநகர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மோர்வி இராச்சியம் 627 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 42,602 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் வாத்வான் (சுரேந்திரநகர்) ஆகும்.[1]
Remove ads
வரலாறு
வாத்வான் இராச்சியம் 1681-ஆம் ஆண்டில் பகத்சிங் உதய்சிங்ஜி நிறுவினார். 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற வாத்வான் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக விளங்கினர். இது பம்பாய் மாகாணத்தின் கத்தியவார் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி மோர்வி இராச்சியம் 1948-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு முடிய சௌராஷ்டிர மாநிலத்துடன் இணக்கப்பட்டது. மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, மோர்வி இராச்சியம் 1956-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
Remove ads
ஆட்சியாளர்கள்
வாத்வான் ஆட்சியாளர்கலை தாக்கூர் சாகிப் என்பர்.[2]
- 1681 – 1707 பகத்சிங் உதய்சிங்
- 1707 – 1739 அர்ஜுன் சிங் மாதவ சிங் (இ. 1739)
- 1739 – 1765 சபல் சிங் இரண்டாம் அர்ஜுன் சிங் (இ. 1765)
- 1765 – 1778 சந்திர சிங் சபல் சிங் (இ. 1778)
- 1778 – 1807 பிரிதிராஜ் சந்திர சிங்(இ. 1807)
- 1807 – 1827 ஜலம் சிங் பிரிதிராஜ் சிங் (இ. 1827)
- 1827 – 1875 ராய் சிங் ஜலம் சிங் (இ. 1875)
- 1875 – 5 மே 1885 தாஜிராஜ் சந்திர சிங் (பி. 1861 – இ. 1885)
- 20 மே 1885 – 25 மே 1910 பால்ச் சிங் சந்திர சிங் (பி. 1863 – இ. 1910)
- 25 மே 1910 – 22 பிப்ரவரி 1918 ஜஸ்வந்த் சிங் பெச்சர் சிங் (இ. 1918)
- 22 பிப்ரவரி 1918 – 1934 ஜோர்வர் சிங் ஜஸ்வந்த் சிங் (பி. 1899 – இ. 1934)
- 1934 – 15 ஆகஸ்டு 1947 சுரேந்திர சி ஜோர்வார் சிங் (பி. 1922 – இ. 1983)
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads