விக்டோரியா நிறுவனம் (கல்லூரி)

From Wikipedia, the free encyclopedia

விக்டோரியா நிறுவனம் (கல்லூரி)map
Remove ads

விக்டோரியா நிறுவனம்(கல்லூரி) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1932 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதும் கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுமான பழமையான இளங்கலை மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும்.[1]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...

கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதும், முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை உணர்வை அவர்களிடம் வளர்ப்பதும் இக்கல்லூரியின் நோக்கமாகும். கொல்கத்தா பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட சீரான பாடத்திட்டம் மூலம் பட்டப்படிப்போடு, கூடுதல் படிப்புகள் மற்றும் சான்றிதழ் திட்டங்களும் இக்கல்லூரியில் பயிற்றுவிக்கப்படுகிறது.

Remove ads

துறைகள்

அறிவியல் பிரிவு

  • வேதியியல்
  • கணிதம்
  • உளவியல்
  • இயற்பியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • புவியியல்
  • பொருளாதாரம்

கலை மற்றும் வணிகப்பிரிவு

  • வங்காளம்
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • உருது
  • வரலாறு
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • வணிகம்

அங்கீகாரம்

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரிவு 2 எஃப் மற்றும் 12 பி இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [2]. 2016 ஆண்டில், இது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவையால் (என்ஏஏசி) பி+ தரத்தை பெற்று அங்கீகாரமடைந்தது.[3]

மேலும் காண்க

  • கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல்
  • இந்தியாவில் கல்வி
  • மேற்கு வங்காளத்தில் கல்வி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads