விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரம்

From Wikipedia, the free encyclopedia

விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரம்
Remove ads

விக்டோரியா கல்லூரி (Victoria College)இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுழிபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது.[1][2]

விரைவான உண்மைகள் Victoria College விக்ரோறியாக் கல்லூரி, முகவரி ...
Remove ads

வரலாறு

கனகரத்தினம் முதலியார் என்பவர் 1876 ஆம் ஆண்டில் சுழிபுரம் இந்து ஆங்கில பாடசாலையை நிறுவினார். இப்பாடசாலைக்கு பின்னர் விக்ரோரியா கல்லூரி எனப் பெயரிடப்பட்டது. 1880 எனப் பொறிக்கப்பட்ட மணி இப்பாடசாலையில் இன்னும் உள்ளது.[சான்று தேவை] 1892 இல் அரச உதவி பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது. 1905 ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட ரிட்ஜ்வே மண்டபத்தை அப்போது பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக இருந்த சேர் என்றி பிளக் திறந்து வைத்தார். 1938 ஆம் ஆண்டில் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.[3]

1946 ஆகத்து 1 இல் இப்பாடசாலையை இலங்கை அரசாங்கம் கையேற்றுக் கொண்டது. 1948 இல் கல்லூரியின் ஆரம்பப் பிரிவும் 1951 இல் நான்கு ஆய்வுகூடங்களும் அமைக்கப்பட்டன. 1955 இல் குருகே மண்டபம் அமைக்கப்பட்டது.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads