விசயராகவப் பெருமாள் கோவில்
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விசயராகவப் பெருமாள் கோவில் (Vijayaraghava Perumal temple) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புட்குழி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள விஷ்ணு கோயிலாகும். இது காஞ்சிபுரத்திற்கு மேற்கே 7 மைல் தொலைவிலும், சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திராவிடக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இக்கோயில், கிபி 6-9 ஆம் நூற்றாண்டுகளில் பெருமாளைக் குறித்து ஆழ்வார்களால் பாடப்பட்ட தமிழ் பக்தி பாடல் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் மகிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. விஷ்ணுவை ‘விசயராகவப் பெருமாள்’ என்றும் அவரது மனைவி இலட்சுமி ‘மரகதவல்லி தாயார்’ என்றும் போற்றப்படுகிறார்.
இந்தக் கோயில் பழங்காலத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் பாண்டியர்களாலும், பின்னர், சோழர்கள் மற்றும் தஞ்சை நாயக்கர்களின் வெவ்வேறு காலங்களில் பிற்கால பங்களிப்புகளுடன் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தக் கோவிலில் சோழர் காலத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கோவிலில் ஐந்து அடுக்கு நுழைவாயில் கோபுரம் கருங்கல்லால் நிறுவப்பட்டுள்ளது இந்த வளாகத்தில் அனைத்து கோயில்களும் உள்ளன. கோயிலின் மேற்கே குளம் ஒன்று அமைந்துள்ளது. தெப்பத் திருவிழா (மாசி) பிரம்மோற்சவம் (தை) ஆகியவை கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களாகும்.
Remove ads
கட்டிடக்கலை
இந்தக் கோயில் 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாக கோவிலில் உள்ள கல் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.[1] 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இது விசயராகவ சுவாமிக்கு (மூலவர்) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மார்கதவல்லி தாயாருக்கு ஒரு தனிக் கோயிலும், இராமானுசருக்கு ஒரு சன்னிதியும் உள்ளன. மைய சன்னதியில் நான்கு கைகளால் அலங்கரிக்கப்பட்ட விசயராகவனின் சிலை உள்ளது. இங்கு சடாயுவிற்கு இறுதி சடங்குகளைச் செய்யும் சிலையும் இங்கு காணலாம். ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய சிலைகள் பூமியை பர்த்தபடி இருக்கும் சிலையும் உண்டு. முகத்தில் துக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த சிலை உருவானது என்று நம்பப்படுகிறது பொதுவாக பெருமாள் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீதேவி இந்த கோவிலில் அவரது இடதுபுறத்தில் அமைந்திருக்கிறார். அநேகமாக சடாயுவின் மரணத்தால் ஏற்பட்ட துக்கத்தின் காரணமாக இவ்வாறு இருக்கலாம். விசிட்டாத்துவைதத் தத்துவத்தின் போதகர் இராமானுசர் தனது ஆரம்பக் கல்வியை இந்த கோவிலில் பெற்றார்.[2]
Remove ads
புராணம்

இராமன் சீதையுடன் வனவாசத்தில் இருக்கும் போது சீதையைத் தனியே விட்டு விட்டு வேட்டைக்குப் போகும் போது சீதைக்குத் துணையாக இருந்தவன் சடாயு. இராவணன் சீதையைச் சிறைப்பிடித்துச் செல்லும்போது அவனுடன் சண்டையிட்டு காயமடைகிறான். இராமன் வேட்டையில் இருந்து திரும்பி வரும்போது அவனிடம் நடந்த நிகழ்வை எடுத்துக் கூறிவிட்டு இறந்து விடுகிறான்.[3] [4] இங்கிருக்கும் விசயராகவப் பெருமாள் இந்த இடத்தில் சடாயுவின் இறுதி சடங்குகளை நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது. சடாயு விழுந்த குளம் ‘சடாயு தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.[5] சடாயு, புல் இனத்தைச் (கழுகு குடும்பத்தின் ஒரு தனி குடும்பம்) சேர்ந்தவர். அவர் இறந்தவுடன் ஒரு குழியில் புதைக்கப்பட்டார். எனவே இந்தத் தளம் திருப்புட்குழி என்று அழைக்கப்படுகிறது. இதே புராணக்கதை புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயிலுடன் தொடர்புடையது.[6]
Remove ads
மேற்கோள்கள்
வெளிஇணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads