விசாகப்பட்டினம் சந்திப்பு தொடர்வண்டி நிலையம்

From Wikipedia, the free encyclopedia

விசாகப்பட்டினம் சந்திப்பு தொடர்வண்டி நிலையம்map
Remove ads

விசாகப்பட்டினம்  சந்திப்பு தொடர்வண்டி நிலையம் ( குறியீடு : VSKP ) இந்தியாவின் , ஆந்திர பிரதேச மாநிலத்தின் , விசாகப்பட்டினம் நகரின் முக்கிய தொடர்வண்டி நிலையம் ஆகும் . 2017-ஆம் ஆண்டு , நாட்டின் மிகத் தூய்மையான தொடர்வண்டி நிலையம் என்ற பெருமையை இத்தொடர்வண்டி நிலையம் பெற்றது[1] . ஹௌரா - சென்னை இருப்புப்பாதையில் அமைந்துள்ள முக்கியமான தொடர்வண்டி நிலையங்களில் ஒன்று விசாகப்பட்டினம் சந்திப்பு தொடர்வண்டி நிலையம் . இத்தொடர்வண்டி நிலையம் இந்திய இரயில்வேயின் தெற்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

 

விரைவான உண்மைகள் விசாகப்பட்டினம் சந்திப்பு, பொது தகவல்கள் ...

Thumb
விசாகப்பட்டினம் சந்திப்பு தொடர்வண்டி நிலையம்
Remove ads

மேற்பார்வை

விசாகப்பட்டினம் சந்திப்பு தொடர்வண்டி நிலையம் , ஒரு முனையம் ( Terminal ) ஆகும் . அதாவது , இத்தொடர்வண்டி நிலையத்திற்குள் நுழையும் ரயில்கள் , வந்த வழியில்தான் திரும்பிச் செல்ல முடியும் .

இத்தொடர்வண்டி நிலையத்திற்கு எந்நேரமும் தொடர்வண்டிகள் வந்து செல்லும் என்பதால் ,இங்கு நடைமேடைகள் ( Platform ) காலியாக இருப்பதில்லை . ஒருவேளை , ஏதேனும் ஒரு வண்டி இத்தொடர்வண்டி நிலையத்திற்குத் தாமதமாக வந்தால் , விசாகப்பட்டினம் நோக்கிச் செல்லும் பிற வண்டிகள் துவ்வாடா அல்லது விஜயநகரம் தொடர்வண்டி நிலையங்களில் நிற்கும் நிலை ஏற்படும் [2].

விசாகப்பட்டினம் மற்றும் செகந்தராபாத் இடையே இயங்கும் தொடர்வண்டிகளில் தினமும் சுமார் 5000 பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் . கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக , விசாகப்பட்டினம் மற்றும் செகந்தராபாத் இடையே 18 தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. தென் மத்திய ரயில்வே மண்டலத்தின் முக்கியமான தொடர்வண்டியாகக் கருதப்படும் கோதாவரி விரைவு வண்டியில் இவ்விரு நகரங்களுக்கு இடையே பயணிப்பது சிறப்பாகும்

ஆந்திர பிரதேசத்தின் மிகவும் பரபரப்பான தொடர்வண்டி நிலைங்களுள் இத்தொடர்வண்டி நிலையமும் ஒன்று . அனைத்து தொடர்வண்டிகளும் , விசாகப்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் நின்று செல்லும் .

Remove ads

வரலாறு

மேற்கத்தியர்கள் வருகைக்கு முன்பே , விசாகப்பட்டினத்தில் , ஒரு வளமையான துறைமுகம் செயல்பட்டு வந்தது[3] . பிற்காலத்தில் ,இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் ,விசாகப்பட்டினம் துறைமுகத்தை மிக முக்கியமானத் துறைமுகமாகக் கருதினர் . மேலும் , இத்துறைமுகம் , சென்னைக்கும் கொல்கத்தாவுக்கு நடுவில் அமைந்திருந்ததால் மேலும் முக்கியத்துவம் பெற்றது . எனவே , இந்த முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரத்தை நாட்டின் பல பகுதிகளுடன் இணைக்க இருப்பு பாதை அமைக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டார்கள் .

அதன் தொடர்ச்சியாக , இந்நகரில் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது .மேலும் ,தற்போதைய விசாகப்பட்டினம் சந்திப்பு தொடர்வண்டி நிலையம் , வால்டைர் தொடர்வண்டி நிலையம் (Waltair railway station) என்ற பெயரில் அமைக்கப்பட்டு , முதல் சரக்கு ரயில் சேவை 1893-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . அடுத்த ஆண்டே , இத்தொடர்வண்டி நிலையத்திலிருந்து பயணிகளுக்கான ரயில் சேவை தொடங்கப்பட்டது [4].

Thumb
இன்றைய விசாகபட்டினம் நகரம்

1987- ஆம் , ஆண்டு அன்றைய விசாகப்பட்டின மேயர் சுப்பாராவ் , வால்டைர் தொடர்வண்டி நிலையத்தின் பெயரை ,விசாகப்பட்டினம் என்று மாற்றினார்

Remove ads

நிர்வாகம் [5]

  • 1896-ஆம் ஆண்டு , வால்டைர் தொடர்வண்டி நிலையம் ,பெங்கால் நாக்பூர் ரயில்வே என்னும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்தது .
  • சுதந்திரத்திற்குப் பின் ,ரயில்வே துறை தேசியமயமாக்கப்பட்ட போது ,1952-ஆம் ஆண்டு , இத்தொடர்வண்டி நிலையம் , இந்தியா ரயில்வேயின் கிழக்கு ரயில்வே என்னும் மண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது .
  • 1955-ஆம் ஆண்டு , இத்தொடர்வண்டி நிலையம் தென் கிழக்கு ரயில்வே மண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது .
  • 2003-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தின் கீழ் இத்தொடர்வண்டி நிலையம் கொண்டுவரப்பட்டது .
  • 2019-ஆம் ஆண்டு விசாகபட்டினத்தையே தலைமையிடமாகக் கொண்டு தெற்கு கடற்கரை ரயில்வே என்ற மண்டலம் உருவாக்கப்பட்டது .எனவே ,தற்போது , இத்தொடர்வண்டி நிலையம் தெற்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது .

கட்டமைப்பு மற்றும் வசதிகள்

இத்தொடர்வண்டி நிலையத்தின் பரப்பளவு 1,03,178 சதுர.மீ ( 11,20,600 சதுர.அடி ). இத்தொடர்வண்டி நிலையத்தில் 8 நடைமேடையில் உள்ளன . இங்குள்ள அனைத்து இருப்புபாதைகளும் மின்மயமாக்கப்பட்ட அகலப்பாதைகள் (Broad gauge )ஆகும். இத்தொடர்வண்டி நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் உள்ளன .

இங்கு அருகலை (Wi -Fi ) வசதி ரயில்டெல் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது .

குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக Fun Zone ஒன்று இத்தொடர்வண்டி நிலையத்தில் உள்ளது . நாட்டின் முதல் Fun Zone இங்கு தான் ஏற்படுத்தப்பட்டது[6] .

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads