விஜயராகவன்

சேரபெருமாள் இராச்சியத்தின் ஆட்சியாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

விஜயராகவன் ( Vijayaraga, 849— 895 பொ.ச.) கேரளாவின் சேர பெருமாள்ஆட்சியாளராவார். இவரது ஆட்சிக் காலத்தில் (கி.பி. 883/84- 895 கி.பி. வரை) அண்டை நாடுகளான ஆய் நாடு மற்றும் மூசிக நாடுகளில் (தெற்கு மற்றும் வடக்கு கேரளா) செல்வாக்கு விரிவடைந்திருக்கலாம். [2]

விரைவான உண்மைகள் விஜயராகவன், சேரபெருமாள் இராச்சியத்தின் ஆட்சியாளர் ...

விஜயராகவன், சேரப் பெருமாள் அரசன் தாணு இரவி வர்மாவின் (கி.பி. 849) ஐந்தாம் ஆட்சியாண்டில் அரச இளவரசனாகத் தோன்றினார். இவர் தாணு இரவியின் மகளையும் (கோ கிழான் அடிகள் ரவி நீலி) மணந்தார். இளவரசி பற்றிய பதிவு தென் ஆய் நாட்டில் காணப்படுகிறது. இவர் தாணு இரவியின் மருமகனாகவும் (சகோதரியின் மகன்) இருந்திருக்கலாம். இவரது இரண்டு மகள்கள் சோழ மன்னன் முதலாம் பராந்தகனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டனர். [3]

விஜயராகவன் முன்பு சேர பெருமாள் வம்சத்தின் அரசன் கோத ரவியுடன் (ஆட்சி சுமார்.905/06-943/44) அடையாளம் காணப்பட்டார்.[4]

Remove ads

வம்ச வரலாறு

கி.பி 11 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட வம்ச வரலாற்றான மூசிக வம்ச காவ்யத்தில் கேரள மன்னன் 'ஜெயராகவன்' என்று வர்ணிக்கப்படும் அதே அரச குடும்பத்தைச் சேர்ந்தவராகவே விஜயராகவனும் இருக்க வேண்டும். காவ்யத்தின்படி, ஜெயராகவன் அந்த நேரத்தில் ( வட கொல்லம் ) மூசிக மன்னன் குஞ்சி வர்மாவின் மகளை மணந்தார். [5]

விஜயராகவன் தனது மைத்துனரான ஈசான மூசிகனுக்கு எதிராக மூசிக இராச்சியத்திற்கு ஒரு இராணுவப் பயணத்தையும் வழிநடத்தினார். ஜெயராகவனின் மகனான கோத வர்மா கேரளகேதுதான் இறுதியில் இரு இராச்சியங்களுக்கும் இடையே மீண்டும் ஒரு சண்டையை ஏற்படுத்தினார். [6]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads