விட்டிலாபுரம்
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விட்டிலாபுரம் (Vittilapuram) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமமாகும். இது தாமிரபரணி ஆற்றின் கரையில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலி - தூத்துக்குடி நெடுஞ்சாலை, 7ஏ வில் வசயப்பபுரம் விலக்கிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த இடத்தின் பெயர் ஸ்ரீபாண்டுரங்க விட்டலார் கோயிலிலிருந்து வந்தது. கி.பி 1547 இல் பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் அதிகாரத்தின்கீழ் விட்டலாராயர் மன்னர் இதைக் கட்டினார்.
Remove ads
கோயில்கள்
விட்டிலாபுரம் ஸ்ரீபாண்டுரங்க விட்டலார், வீரபாகேஸ்வர், வண்டிமலைச்சி அம்மன் கோயில், பாலா விநாயகர், மற்றும் திருவைகுந்தபதி சுவாமி உள்ளிட்ட பல கோயில்கள் இங்கு உள்ளன. திருவைகுந்தபதி சுவாமி கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புனித கால்வாய் பாலம் ஒன்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பின்னர் மாற்றப்பட்டது.
ஸ்ரீபாண்டுரங்க விட்டலார் கோயில்
பாண்டுரங்க கோயில் 2009 ஜீலை 2ஆம் நாளன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இது சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும், ஏனெனில் கிட்டத்தட்ட 106 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீங்கேரி சாரதா பீடத்தின் முழு ஆதரவுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கோயிலில் ஏராளமாகக் கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் காலண்டர் படி தை மாதம் (ஜனவரி ஆங்கில நாட்காட்டி), இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. இந்த கோயிலுக்கு மகாராஷ்டிராவின் மகான்கள் நாமதேவ், துக்காராம் மற்றும் ஹரிதாஸ் கிரி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளோர். ஸ்ரீ நமாஜி மற்றும் ஸ்ரீ கணபதி துக்காராம் மகாராஜா ஆகியோரால் முறையே இரண்டு பகவதமேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.[1]
Remove ads
போக்குவரத்து
திருநெல்வேலி சந்திப்பிலிருந்து பேருந்து இயக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads