வித்வான்சாக்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வித்வான்சாக் (Vidhwansak) என்பது தொலைதூரத்திலுள்ள இலக்குகளை தாக்கப் பயன்படும் ஒரு தொலைகுறித் துப்பாக்கி.(sniper rifle)[1] இது வடமொழியில் அழிப்பவன் என்று பொருளிலான “வித்வான்சாக்” எனும் பெயரில் திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் 2005ல் தயாரிக்கப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் வித்வான்சாக் தொலைகுறித் துப்பாக்கி, அமைக்கப்பட்ட நாடு ...
Remove ads

வரலாறு

  1. 2006ல் முழு பரிசோதனை செய்யப்பட்டது.[3]AMR Vidhwansak பரணிடப்பட்டது 2010-01-19 at the வந்தவழி இயந்திரம் at Indian Military Database</ref>
  2. 2007ல் எல்லை பாதுகாப்புப் படையால் (Border Security Force) 100 வித்வான்சாக்கள் வாங்கும் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.[4]
  3. 2008ல் எல்லை பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டது.[5]

சிறப்புகள்

  • 2,000மீட்டர் வரையிலான தொலைதூர தாக்குதல் திறனுடையது.[3]
  • குறி வைத்து தாக்குதல் மற்றும் 8 மடங்கு பெரிதாக்கும் தொலைநோக்கியுடனானது.
  • போர்க் கருவிகள், ஆயுதக் கூடங்கள், சிறிய ரகப் போர் வாகனங்களைத் தகர்த்தல் போன்றவைக்கு உதவக்கூடியது.
  • 50 முதல் 60 சதவிகிதம் வரையிலான பின்னுதைப்பு விசை தாங்கும் கருவி கொண்டது.(muzzle brake to resist recoil velocity)[3]

விவரங்கள்

வித்வான்சாக் விவரங்கள்

வெடி மருந்துக் குண்டு 12.7x108மி.மீ. 14.5x114மி.மீ. 20x 82மி.மீ.
எடை 25 கி 29 கி 26 கி
நீளம் 1.7 மீ 2.015 மீ 1.795 மீ
புரியிடைத்தூரம் 1: 390 மிமீ 1 : 420 மிமீ 1 : 560 மிமீ
காண் திறன் 8 X 42 மடங்கு பெரிதாக்கும் தொலைநோக்கி.
பின்னுதைப்பு வேகம் 845 மீ/நொடி 1,080 மீ/நொடி 720 மீ/நொடி
செயல்திறமிக்க அடுக்கு 1,800 மீ 1,800 மீ 1,300 மீ

பயன்படுத்துபவர்

  • இந்தியா - இந்திய எல்லை பாதுகாப்புப் படை (100 துப்பாக்கிகள்)[3][5]

மேற்கோள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads