விந்தியசக்தி

வாகாடக வம்சத்தின் முதல் மன்னன் From Wikipedia, the free encyclopedia

Remove ads

விந்தியசக்தி ( Vindhyashakti ; ஆட்சிக் காலம் சுமார் 250 – 275 பொ.ச.[1] ) வாகாடக வம்சத்தை நிறுவியவர். இவரது பெயர் விந்தியவாசினி தெய்வத்திலிருந்து பெறப்பட்டதாக இருக்கலாம் அல்லது தனிப்பட்ட பெயரைக் காட்டிலும் விந்திய மலைகளில் உள்ள இவரது வம்சாவளியைக் குறிக்கும் தலைப்பு அல்லது பிருடாவாக இருக்கலாம். [2]

விரைவான உண்மைகள் விந்தியசக்தி, ஆட்சிக்காலம் ...
Remove ads

வரலாறு

விந்தியசக்தியின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளோ, பதிவேடுகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.[3] அரிசேனனின் காலத்தின் மிகவும் பிற்கால அஜந்தா குகை XVI கல்வெட்டில், விந்தியசக்தி "வாகாடகா குடும்பத்தின் வழி வந்தவர்" என்றும் "துவிஜா" அல்லது "இரண்டு முறை பிறந்தவர்" என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பெரும் போர்களை நடத்தி தனது சக்தியை அதிகப்படுத்தியதாகவும், பெரிய குதிரைப்படையை வைத்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. விந்தியசக்தியின் மகத்துவம் இந்திரன், விஷ்ணு போன்ற கடவுள்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. [4] இருப்பினும், இந்த கல்வெட்டில் இவரது பெயருக்கு முன்னொட்டு எந்த அரசத் தலைப்பும் இல்லை.

Remove ads

புராணங்கள்

புராணங்கள் விந்தியசக்தி மற்றும் அவரது வம்சத்தைப் பற்றி குறிப்பிடுகின்றன. ஆனால் அவற்றின் வரலாற்று நம்பகத்தன்மை கேள்விக்குரியது. வாயு புராணம் விந்தியசக்திக்கு 96 ஆண்டுகள் அற்புதமான நீண்ட ஆட்சியை அளிக்கிறது. மேலும் புராண நூல்கள் விந்தியசக்தி மற்றும் இவரது மகன் பிரவிராவின் காலத்திற்கு இடையில் நாக மன்னர்கள் ஆட்சி செய்ததைக் குறிப்பிடுகின்றன. [5] இன்றைய மத்தியப் பிரதேசத்தில் விந்தியசக்தி விதிஷாவின் ஆட்சியாளராக இருந்ததாக புராணங்களில் இருந்து தெரிகிறது. ஆனால் அது சரியானதாகக் கருதப்படவில்லை.

பல்வேறு ஆசிரியர்கள் விந்தியசக்தியின் அசல் இருப்பை தெற்கு தக்காணம், [[மத்தியப் பிரதேசம்[[ மால்வா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைத்துள்ளனர். கே.பி.ஜெயஸ்வால், ஜான்சி மாவட்டத்தில் உள்ள பகத் என்ற கிராமத்தை, வாகாடர்களின் தாயகமாகக் கருதுகிறார். வாகாடகா என்ற பெயரின் ஆரம்பக் குறிப்பு அமராவதியில் உள்ள ஒரு தூணின் துண்டில் காணப்பட்ட கல்வெட்டில் உள்ளது என்று வி. வி. மிராஷி சுட்டிக்காட்டுகிறார். இது வாகாடகா என்ற 'கிருஹபதி' (வீட்டுக்காரர்) மற்றும் அவரது இரண்டு மனைவிகளின் பரிசைப் பதிவு செய்கிறது. இருப்பினும், இந்த மனிதனின் தனிப்பட்ட பெயருக்கும் வாகாடர்களின் வம்சப் பெயருக்கும் தொடர்பு இருந்ததா அல்லது இவரது அசல் வீடு தக்காணத்தில் இருந்ததா என்பதைக் காட்ட எந்த ஆதாரமும் இல்லை. ஏனெனில் இவர் புனித யாத்திரையில் அமராவதியின் பௌத்த விகாரைக்கு வருகை தந்துள்ளார்.[5]

இவரது மரணத்திற்குப் பிறகு பெரும்பாலும் மறக்கப்பட்டதாகவோ அல்லது புறக்கணிக்கப்பட்டதாகவோ தெரிகிறது. ஒருவேளை இவரது மிகவும் புகழ்பெற்ற மகனும் வாரிசுமான முதலாம் பிரவரசேனன் மூலம் மறைக்கப்பட்டிருக்கலாம். வாகாடக வம்சத்தின் அனைத்து செப்புத் தகடுகளும் விந்தியசக்திக்குப் பதிலாக பிரவரசேனனுடன் குடும்பப் பரம்பரையைத் தொடங்குகின்றன. [6]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads