இந்திரன் (இந்து சமயம்)

From Wikipedia, the free encyclopedia

இந்திரன் (இந்து சமயம்)
Remove ads

இந்திரன் (ஒலிப்பு) (அல்லது தேவேந்திரன்[1]) (Indra) என்பவர் இந்து தொன்மவியல் அடிப்படையில் தேவ உலகத்தின் அரசனாவார். இவருடைய மனைவி இந்திராணி. இவர் வேதகால இந்து சமயத்தில், மிக முக்கியமான தேவர்களில் ஒருவராக உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்டவர். இந்திரனின் தேரோட்டி மாதலி ஆவார். இந்திரன் தொடர்பான செய்திகள் அனைத்து வேதங்கள், புராணங்கள், மற்றும் இதிகாசங்களில் குறித்துள்ளது.

விரைவான உண்மைகள் இந்திரன், அதிபதி ...
Remove ads

ரிக் வேதத்தில்

இந்துக்களின் மிகப்பழைய புனித நூலான ரிக் வேதத்தில் தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவர் இந்திரனே. அவ்வேதத்திலுள்ள சுலோகங்களில் காற்பங்குக்கு மேற்பட்டவை இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. இவருடைய வீர தீரச் செயல்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகள் வேதங்களிலே காணப்படுகின்றன. மனத்தின் வேகத்தையும் கடந்த வேகத்தில் செல்லக்கூடிய தேரை உடையவனாகக் கூறப்படுகின்ற இந்திரன் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவர் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவர் வஜ்ஜிராயுதத்தை ஆயுதமாகக் கொண்டவர். இவர் போர்க்குணம் கொண்ட கடவுளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாகப் போருக்குச் செல்லும் வீரர்கள் இந்திரனை வணங்கிச் செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்திரனுக்கு ஜெயந்தன் என்னும் பெயருடைய ஒரு மகன் உண்டு என்று கூறப்படுகிறது. அமிர்தத்தை குடித்த தேவர்களில் ஒருவர் . யாகங்களில் படைக்கப்படும் ஹவிஸை (படையலை) அக்கினி இந்திரன் முதலான தேவர்களுக்கு பகிர்ந்து தருகிறார்.

Remove ads

தமிழிலக்கியங்களில் இந்திரன்

தமிழ் மொழியின் சங்க இலக்கியங்களில் இந்திரனைப் பற்றி பல்வேறு எழுத்தாளர்களின் கதைகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில் , இந்திரன் மலை வெண்குடை மன்னவன் என்று வர்ணிக்கப்படுகிறார், அதாவது "முத்து மாலையும் வெள்ளைக் குடையும் கொண்ட இந்திரன்" என்று பொருளாகும்.

சிலப்பதிகாரம்,மணிமேகலையில் இந்திரன் வின்னவர்கோமான் எனக்குறிப்பிடப்படுகிறார்.வேந்தன்' என்பதற்கு 'அரசன்' எனும் பொருளிலே இலக்கியங்களில் பதிவுகள் காணப்படுகின்றன.

"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி" என்னும் குறளில் திருவள்ளுவர் நீத்தார் சிறப்பில் இந்திரனை குறிப்பிடுகிறார்.ஐந்து புலன்களையும் அடக்கியவனே தவம் செய்தவன் ஆவார். அவர் "ஐந்தவித்தான்" என்றும், "பொறிவாயில் ஐந்தவித்தான்" என்றும் வள்ளுவனால் சிறப்பிக்கப்படுபவர்.

'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார், அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள், போர்ப்புறு முரசம் கறங்க, ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே என புற நானூற்றுப்பாடல்

இந்திரனின் கோவிலை வச்சிரத்தடக்கை(வச்சிராயுதம்) நெடியோன் கோவின் என குறிப்பிடுகிறது.

Remove ads

புராணங்களில்

தொடர்ந்தும் தேவர்களின் தலைவனாகவே இந்திரன் மதிக்கப்பட்டாலும், வேதகாலத்துக்குப் பின்னர் அவர் நிலை மாறிவிட்டது.ஆரியர்களால் உருவாக்கப்பட்ட ராமாயணத்தின் ஆரம்ப காலம் (கி.மு 6ஆம் நூற்றாண்டு) தொட்டே இந்திரன் பற்றிய கட்டுக்கதைகள் தொடங்கிவிட்டன என்பதே உண்மை. வியாசரால் எழுதப்பட்ட ஜெயம் (கி.மு 5 ஆம் நூற்றாண்டு) எனப்படும் மகாபாரதத்திலும், புராணங்களிலும் இந்திரன் பெரிய அளவில் போற்றப்படவில்லை என்றே தெரியவருகிறது. வேதங்களில்கூட மூன்று இந்திரர்கள் உள்ளனர். அவர்களுள் இரண்டு இந்திரர்கள் இந்தியத்தமிழர்கள்; ஒருவர் கிருஷ்ணர் எனப்பட்ட கரவேல், மற்றொருவர் திருமால் எனப்பட்ட செம்பியன் கரிகால்சோழன். முதல் இந்திரனே அந்நிய நாட்டவன். இவனுக்கும் ஒரு இந்தியத் தமிழ்ப்பெண்ணுக்கும் பிறந்தவனாலேயே இந்த அந்நிய இந்திரன் அடக்கி ஒடுக்கப்பட்டான். அப்படி அடக்கி ஒடுக்கியவனே செவ்வாய் எனப்பட்ட செங்குட்டுவன்.[சான்று தேவை]

பின் குறிப்பு:- இந்த ஆரியர் -தமிழர் பாகுபாடு மிகுந்த நகைப்பை வரவழைக்கும். தமிழ்சித்தர் போகர் அருளிய 'ஜெனன சாகரம்' என்ற நூலைப் படித்திருந்தால் இது புலப்படும். 'ஆதியில் நந்தியாகி, அயனும் மாலுமாகி, பிறகு இந்திரன், முருகன், ராமன், கிருஷ்ணன், நபி என்று ஜெனனம் எடுத்தபின் இன்று போகராக இருக்கிறேன்' (பா.324) என்கிறார். அப்படி என்றால் தேவேந்திரனான போகர் ஆரியரா? புராணங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் வேறொரு பாத்திரத்தை ஏற்கும். இதை ஈசன் தான் முடிவு செய்கிறார் என்று போகர் குறிப்பிடுகிறார்.[சான்று தேவை]

இராமாயணம்

மகாபாரதம்

இந்திரனின் அம்சமாக பிறந்தவன் அருச்சுனன். அருச்சுனனை தேவலோகத்திற்கு அழைத்துச் சென்று பல ஆயுதங்களை கொடுத்து உதவினார். குருச்சேத்திரப் போரில் அருச்சுனனின் நலம் வேண்டிய இந்திரன் அந்தணர் வேடம் தரித்து கர்ணனிடம் கவச குண்டலங்களை தானமாக பெற்றார்.[சான்று தேவை]

இந்திரனின் பிற பெயர்கள்

  • அந்தரநாதன்
  • அமரர்கோன்
  • அமரர்நாதன்
  • அமரன்
  • அமரிறை
  • அமரேசன்
  • அமரேசுவரன்
  • அயிராணிகேள்வன்
  • அயிராவதன்
  • வச்சிரதரன்
  • வச்சிரப்படையோன்
  • வச்சிரபாணி
  • வச்சிரன்
  • வயிரப்படையோன்
  • வெள்ளானையூர்ந்தோன்
  • வெள்ளையானைவாகனன்
  • வேந்தன்
  • மருதக்கிழவன்
  • மருதநாதன்
  • மருதநில வேந்தன்
  • மன்னவன்
  • தேவபதி
  • தேவர்கோன்
  • தேவராசன்
  • தேவேந்திரன்

[2]

இந்திர விழா

இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார்.[3]

இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது.[4] இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது.[5] தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் [6] குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம். [7] [8]

Remove ads

இவற்றை பார்க்கவும்

விரைவான உண்மைகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads